

புதுச்சேரி
புதுச்சேரி ஊசுட்டேரி சேற்றில் சிக்கி இறந்த பசுவை விட்டு விலகாமல் அதன் கன்றுக்குட்டி காத்திருந்த சம்பவம் காண்பவர்களை கண் கலங்கச் செய்தது.
புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரியான ஊசுட்டேரி வறண்டுபோனது. இதனால் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து கால்நடைகள் மேய்ச்சலுக்கு ஏரிக்குள் வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஒருவாரமாக புதுச்சேரியில் பெய்து வரும் மழை காரணமாக ஏரியில் குறைந்த அளவில் நீர் நிற்கிறது. இதனால் சேறும் உருவாகியுள்ளது. இங்கு மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று நீர் குடிக்க வந்த போது சேற்றில் சிக்கி, அதிலிருந்து மீள முடியாமல் இறந்தது. இதனை அறியாத அதன் கன்றுக்குட்டி தாய்ப்பசுவுக்காக ஏங்கி அருகிலேயே உட்கார்ந்தது. இது காண்பவர்களை கண் கலங்கச் செய்தது.
-செ.ஞானபிரகாஷ்