சந்திரனில் தண்ணீர் இருந்தால் சொல்லுங்கள்: இஸ்ரோவுக்கு வேண்டுகோள் விடுத்த சென்னை குடிநீர் வாரியம் 

சந்திரனில் தண்ணீர் இருந்தால் சொல்லுங்கள்:  இஸ்ரோவுக்கு வேண்டுகோள் விடுத்த சென்னை குடிநீர் வாரியம் 
Updated on
1 min read

சென்னை

சந்திரனில் தண்ணீர் இருப்பதை நீங்கள் பார்த்தால் யாருக்கு முதலில் சொல்ல வேண்டும் என்று உங்களுக்கு தெரியும் என்று இஸ்ரோவுக்கு சென்னை குடிநீர் வாரியம் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

சந்திரயான்-2 விண்கலம் மார்க்-3 ராக்கெட் மூலம் நேற்று பிற்கபல் 2:43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், செப்டம்பர் 8-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி உட்பட பல்வேறு தரப்பினரும் இஸ்ரோக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

இந்தநிலையில் சென்னை குடிநீர் வாரியமும் இஸ்ரோவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. பாராட்டுடன் தனது கோரிக்கை ஒன்றையும் இஸ்ரோவக்கு முன் வைத்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியத்தின் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்‘‘சந்திராயன் -2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ நிறுவனத்துக்கு பாராட்டுக்கள். எங்கள் நகரில் புதிய நீராதாரங்களை தேடும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். சந்திரனில் தண்ணீர் இருப்பதை நீங்கள் பார்த்தால் யாருக்கு முதலில் சொல்ல வேண்டும் என்று உங்களுக்கு தெரியும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in