

திருச்சி
திருச்சியில் காதல் விவகாரத்தில் சட்டக் கல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருப்பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த சுந்தர் மகள் ரம்யா(23). இவர், திருச்சி காஜாமலை முஸ்லிம் 2-வது தெருவில் தோழிகளுடன் சேர்ந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அரசு சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் நாகை மாவட்டம் சந்திரபாடியைச் சேர்ந்த தவச்செல்வன்(27) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது.
சமீபகாலமாக தவச்செல்வனு டன் பேசுவதை ரம்யா தவிர்த்து வந்துள்ளார். இதனால், தவச்செல்வன் நேற்று திருச்சிக்கு வந்து காஜாமலையில் ரம்யா தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று, இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது, தவச்செல்வன், தான் எடுத்து வந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை ரம்யா மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
ரம்யாவின் அலறலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த் னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த கே.கே.நகர் போலீஸார் அரசு மருத்துவ மனைக்குச் சென்று ரம்யாவிடம் விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தவச்செல்வனைப் பிடிக்க தனிப் படை போலீஸார் நாகப்பட்டினம் விரைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘ஏற்கெனவே திருமணமான ரம்யா, கணவரை பிரிந்து வாழ்கிறார். இந்த சூழலில் தவச்செல்வனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தமிழ்ச்செல்வனிடம் பழகுவதை ரம்யா தவிர்த்துவந்த நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவர் ரம்யாவை வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுத்ததால் ரம்யா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தவச்செல்வனை கைது செய்து விசாரித்தால்தான் முழுமையாக விவரங்கள் தெரிய வரும்’’ என்றனர்.