காவிரி ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட திட்டம்: முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

சேலம்

காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட ஆய்வு செய்யப்பட்டு, திட்ட மதிப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 இடங்களில் அணைகள் கட்டப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, "காவிரி ஆற்றில் 3-4 இடங்களில் தமிழக அரசின் பொறியாளர்கள் ஆய்வு செய்து, ஒன்றரை டி.எம்.சி. தண்ணீரை தேக்கும் அளவுக்கு ஒரு கதவணை கட்ட முயற்சி எடுத்து வருகிறோம். அதற்கான மதிப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான ஒப்பந்தம் விடப்படும்.

மேலும், மூன்று கதவணைகள் அமைப்பதற்கு அரசு ஆய்வு மேற்கொண்டிருக்கிறது. அந்தப் பணியும் விரைந்து முடிக்கப்பட்டு, காவிரி நீர் விவசாயிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும்", என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in