

சென்னை
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் 2015 முதல் 2018 வரையிலான காலத் தில் அரசின் பங்களிப்பு குறைந் துள்ளதாக தணிக்கைத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழக அரசு கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை (சிபிஎஸ்) அறிமுகப்படுத்தியது. இத்திட்டப் படி அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 10 சதவீதத்தை பங்களிப்பாக அளிக்க வேண்டும். அதற்கு இணையான பங்களிப்பை அரசு வழங்கும்.
அரசு ஊழியர்களின் பங்களிப் பானது சம்பளத்தில் இருந்து பிடித் தம் செய்யப்பட்டு, அரசின் தொகு நிதியில் பற்று வைக்கப்படுகிறது. இந்த தொகைகள் பொதுக் கணக்கில் வைப்பாக வைக்கப் படுகிறது.
இந்த நிதி, 91 நாள் கருவூலப் பட்டியில் முதலீடு செய்யப்படு கிறது. முதிர்வு காலத்தில் தொடர்ந்து மறுமுதலீடும் செய்யப்படுகிறது. மேலும் ஆண்டுதோறும் வட்டி கணக்கிடப்பட்டு, அரசு ஊழியர்கள் சிபிஎஸ் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இதற்கிடையில் மத்திய அரசு தேசிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்பின் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேரும்படி தமிழக அரசை வற்புறுத்தியது. ஆனால், மக்கள வையில் இதற்கான சட்டம் நிறைவேற்றப்படாததை சுட்டிக் காட்டி சேரவில்லை. சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னரும் எந்த நடவடிக்கையும் தமிழக அரசால் எடுக் கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடர்பான தணிக்கையை இந்திய கணக்கு தணிக்கை அலுவலகம் மேற்கொண்டது. அதில், அந்த 3 ஆண்டுகளில் ஊழியர்களின் பங்களிப்பை விட அரசின் பங்களிப்பு ரூ.204 கோடியே 89 லட்சம் குறைந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி, பொதுக்கணக்கின்கீழ் வைப்பு நிதியில் சேர்த்த தொகை யான ரூ.23,392 கோடியே 42 லட்சத்துக்கு பதில், ரூ.22 ஆயிரத்து 506 கோடியே 89 லட்சம் மட்டுமே கருவூலப்பட்டியில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இவற்றுக்கும் மேலாக, 2015-2018-க்கு உட்பட்ட காலத்தில், தனிப் பட்ட சிபிஎஸ் கணக்கு வைத் திருப்போரின் இருப்புக்கு 7.60 சதவீதம் முதல் 8.70 சதவீதம் வரை வட்டி வழங்க அனுமதிக்கப் பட்டது.
ஆனால், அரசோ தன் முதலீட் டுக்கு 6.03 சதவீதம் முதல் 7.85 சதவீதம் வரை ஈட்டியது. அரசுக்கு ரூ.797 கோடியே 12 லட்சம் கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறிந்துள்ளது.
இந்த கூடுதல் செலவினம், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேராததால் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 10 சதவீதத்தை பங்களிப்பாக அளிக்க வேண்டும். அதற்கு இணையான பங்களிப்பை அரசு வழங்கும்.