சந்திரயான் - 2 வெற்றி; இஸ்ரோவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் நாள்: இஸ்ரோ தலைவர் சிவன் நெகிழ்ச்சி 

ஜிஎஸ்எல்வி மார்க் -3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் செலுத் தப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன். படம்: ம.பிரபு
ஜிஎஸ்எல்வி மார்க் -3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் செலுத் தப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன். படம்: ம.பிரபு
Updated on
2 min read

சென்னை

இஸ்ரோவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.

சந்திரயான்-2 ஏவுதல் திட்டம் 5 முறை தள்ளிவைக்கப்பட்டு, இப்போது வெற்றி அடைந்துள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் -3 ராக்கெட் வெற்றிகரமாக நேற்று விண்ணில் ஏவப்பட்டதையடுத்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

வரலாற்றில் முக்கியமான நாளான இன்று, இஸ்ரோவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி நாளாக அமைந்துள்ளது. சந்திரயான்-2 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட், திட்டமிட்டதைவிட அதிக தூரத்தில் சந்திரயானை கொண்டு சென்று இஸ்ரோ குழுவின் வேலையை எளிதாக்கியுள்ளது.

கடின உழைப்பு

முன்பு அனுப்பப்பட்ட ஜிஎஸ் எல்வி ராக்கெட்களின் செயல் பாட்டைவிட தற்போது ஏவப்பட் டுள்ள மார்க்-3 ராக்கெட் 15 சதவீதம் கூடுதல் செயல்பாட்டுடன் உள்ளது. கடந்த ஒன்றரை வருட மாக செயற்கைக்கோள் குழு மிகக் கடினமாக உழைத்து சந்திரயான் -2 விண்கலத்தை வடிவமைத் துள்ளது.

அடுத்த ஒன்றரை மாதத்தில் மிகக் கடினமான 15 கட்டங்களைத் தாண்டி சந்திரயான்-2 நிலவுக்குக் கொண்டு செல்லப்படும். அதிலும் நிலவில், லேண்டர் தரை இறங் கும் 15 நிமிடங்கள் மிக சவாலான தாக இருக்கும். லேண்டர் தரை யிறங்கும்போது அதன் வேகம் ஒரு நிமிடத்துக்கு 2 மீட்டர் என்ற அளவில் குறைக்கப்பட்டு, மிகவும் மெதுவாக நிலவில் இறங்கும். இது பூமியில் பெங்களூரு அருகே பையாலாலுவில் உள்ள விண்வெளி கட்டமைப்பு மையத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களைச் சேகரித்து அனுப்பும்.

இதுவரை எந்த நாடும் செல்லாத நிலவின் தென்துருவப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் சந்திரனைப் பற்றிய புரிதல்கள் மேலும் மேம்பட உதவுவதுடன், வருங்கால தலை முறையும் விண்வெளி ஆய்வு களை மேற்கொள்ள வழிகாட் டும். சர்வதேச விண்வெளிஅரங் கில் இந்திய தேசியக்கொடி உயரத்தில் பறக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

சந்திரயான் -2: முக்கிய அம்சங்கள்

சந்திரயான்-2 விண்கலம் மற்றும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் அனைத்தும் நவீன தொழில்நுட்பங்களில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவை. சந்திரயான்-1 விண்கலத்தில் அமெரிக்கா, ஐரோப்பா கூட்டமைப்பு நாடுகளுக்குச் சொந்தமான 5 ஆய்வுக் கருவிகள் இடம்பெற்றன. அந்நிலை மாற்றப்பட்டு பிற நாடுகளின் உதவியின்றி முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 13 கருவிகளே சந்திரயான்-2 விண்கலத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ரூ.374 கோடியில் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3, ஐந்தாம் தலைமுறை ராக்கெட்டாகும். இதன் எடை 6 ஆயிரத்து 400 கிலோ. இதன் உயரம் மிகக் குறைவாக 43.43 மீட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியா செலுத்திய ராக்கெட்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது. மார்க்-3 ராக்கெட்டில் மொத்தம் 3 நிலைகள் உள்ளன. இதன் இறுதி நிலையான கிரையோஜெனிக் இன்ஜின் முழுவதும் நம் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. இதன்மூலம் அதிகபட்சம் 4 ஆயிரம் கிலோ எடை உடைய செயற்கைக்கோள்களையும் நம்மால் விண்ணில் செலுத்த முடியும்.

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை சந்திரயான் விண்கலம் 48 நாட்களில் சென்றடையும். அத்துடன், இத்தகைய ஆய்வுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் செலவு செய்த தொகையைவிட 20 மடங்கு குறைவான செலவில் (ரூ.978 கோடி) இந்தியா இந்த திட்டத்தை நிறைவேற்றுவதும் குறிப்பிடத்தக்கது.

சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டதை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பார்வையாளர் பகுதியில் இருந்து 7,500 பேர் பார்வையிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in