Published : 23 Jul 2019 08:37 AM
Last Updated : 23 Jul 2019 08:37 AM

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அடிக்கடி மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்படுவதால் அவதி

சென்னை 

தொழில்நுட்ப கோளாறு காரண மாக மெட்ரோ ரயில் சேவை நேற்று 3-வது நாளாக பாதிக்கப் பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

சென்னையில் அடுத்தகட்ட போக்குவரத்து வசதியாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் தாங்கள் செல்லவேண்டிய இடங் களுக்கு விரைந்து செல்ல முடி கிறது. இருப்பினும் அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு களால் மெட்ரோ ரயில் சேவை தடைபடுவது பயணிகளை அவதிக் குள்ளாக்குகிறது.

குறிப்பாக, கடந்த 20-ம் தேதி காலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப் பேட்டையை நோக்கி வந்து கொண்டிருந்த மெட்ரோ ரயில், சென்ட்ரல் அருகே இன்ஜின் கோளாறால் நின்றது. இதனால் சேவை பாதிக்கப்பட்டது.

இதேபோல், வண்ணாரப் பேட்டையில் இருந்து விமான நிலையம் நோக்கி நேற்று முன் தினம் காலை 8.15 மணிக்கு புறப் பட வேண்டிய மெட்ரோ ரயிலில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால் மெட்ரோ ரயில் சேவையில் 30 நிமிடங்கள் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் 3-வது நாளாக நேற்று சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் தடத்தில் ஆலந்தூரில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஒரு மணிநேரத்துக்கு மெட்ரோ ரயில்சேவையில் பாதிப்பு ஏற்பட் டது. இதனால் விமான நிலையம் செல்ல வேண்டிய பயணிகள் ஆலந்தூரில் இறங்கி மற்றொரு வழித்தட மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர். மாலை 5 மணிக்கு பிறகு வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப் பட்டன.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறும்போது, “மெட்ரோ ரயிலில் தற்போது தினமும் பயணம் செய்து வருகிறோம். வெயில் பாதிப்பு இல் லாமல், ஏசியில் சொகுசாகவும், போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாகவும் பயணம் செய்ய முடிகிறது. ஆனால், சமீபகாலமாக மெட்ரோ ரயில்சேவையில் அடிக் கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதால், அவதிப்பட்டு வருகிறோம். எனவே, மக்களின் நம்பிக்கையை இழக்காமல் இருக்க சேவையில் பாதிப்பு இல்லா மல் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மெட்ரோ ரயில் சேவையில் அடிக்கடி கோளாறு ஏற்படுவது குறித்து தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். சிக்னல் தொழில்நுட்ப பிரச்சினை இனி ஏற்படாமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x