

இ.ஜெகநாதன்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மாவட்ட ஆட்சியர் ஜெய காந்தனுக்கு, அவரது 85 வயது தந்தையும் உதவி புரிந்து வரு கிறார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஜெயகாந்தன், மூன்றே மாதங்களில் 4,900 வரத்துக் கால்வாய்களை தூர்வாரி, மத்திய அரசின் விருது பெற்றார். அத்தோடு நின்றுவிடாமல், மாவட்ட நிர்வாகம் சார்பில் 20 ஜேசிபி இயந்திரங்களை வாங்கி மாவட்டத்தில் நீர்நிலைகள், வரத் துக் கால்வாய்களை தொடர்ந்து தூர்வாரி வருகிறார்.
இதுவரை பாலாறு உள்ளிட்ட 3 சிற்றாறுகளும், 500-க்கும் மேற் பட்ட நீர்நிலைகளும் ஆட்சியரின் முயற்சியால் தூர்வாரப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் வறட்சியைப் போக்க தீவிர நடவடிக்கை எடுத்து வரும் ஆட்சியரின் செயல்பாட்டை பெரிதும் பாராட்டிய உயர் நீதிமன்ற மதுரை கிளை இதேபோல, மற்ற மாவட்ட ஆட்சியர்களும் செயல்பட அறிவுரை வழங்கியது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ஆங்காங்கே தண்ணீர் பிரச்சினையும் எழுந்தது. இதையடுத்து ஆழ்துளைக் கிணறு களை அமைக்க உடனுக்குடன் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தாலும் ஹைட்ரோ ஜியாலஜிஸ்ட் பற்றாக் குறையால் ஊற்று பார்த்துக் கொடுப்பதில் சிக்கல் எழுந்தது. இதனால் ஆழ்துளை கிணறுகளை அமைப்பதிலும் பிரச்சினை ஏற் பட்டது.
இந்நிலையில், ஆட்சியருக்கு உதவியாக அவரது தந்தை ஜெக தீஸ்வரன் களத்தில் இறங்கினார்.
85 வயதான அவர், இதுவரை மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஊற்று பார்த்து கொடுத்துள்ளார். அதில் ஒன்று கூட தப்பவில்லை. அனைத்து இடங்களிலும் தண்ணீர் கிடைப்ப தால் அதிகாரிகளும் அவரை ஆர்வ முடன் அழைத்துச் செல்கின்றனர்.
ஆழ்துளை கிணறு அமைக்க ஆட்சியரிடம் மனு கொடுக்கும் விவசாயிகளுக்கும் அவர் இலவச மாக ஊற்று பார்த்து கொடுக்கிறார். இதனால், அவர்களும் ஆட்சியரின் தந்தைக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஆட்சியர் ஜெயகாந்தனிடம் கேட்டபோது, ‘‘எனது தந்தை ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். அவர் பணிபுரிந்த காலத்திலேயே ஊற்று பார்த்து கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் கையில் நீண்ட குச்சியை வைத்தே ஊற்றை கண்டுபிடித்து விடுவார். அவர் கைகாட்டிய இடத்தில் இதுவரை தண்ணீர் கிடைக்காமல் இருந்ததில்லை.
ஜியாலஜிஸ்ட் பற்றாக்குறை இருக்கும் சமயத்தில், அவரே இல வசமாக ஊற்று பார்த்துக் கொடுக்க ஆர்வமாக இருப்பதால், நானும் அதை பொருட்படுத்தவில்லை. மாவட்டத்தின் தண்ணீர் பிரச்சினை யைத் தீர்க்க எனக்கு அவர் உதவி யாக இருப்பது பெருமையாக உள் ளது’’ என்று ஆட்சியர் தெரிவித்தார்.இதுவரை 60-க்கும் மேற்பட்ட ஊற்று பார்த்து கொடுத்துள்ளார். அதில் ஒன்றுகூட தப்பவில்லை. அனைத்து இடங்களிலும் தண்ணீர் கிடைப்பதால் அதிகாரிகளும் அவரை ஆர்வமுடன் அழைத்துச் செல்கின்றனர்.