

சென்னை
திருமண உதவி, மகப்பேறு உதவி, மடிக்கணினி, மிக்ஸி, கிரைண்டர், சீருடை உள்ளிட்ட இலவச மற்றும் மானியத் திட்டங்களுக்கான நிதி படிப்படியாக குறைக்கப்பட்டு வரு வதாக தணிக்கைத் துறை அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது விநியோக திட்டத்தில் அரிசியை இலவசமாகவும் பாமா யில், உளுந்து போன்றவற்றை மானிய விலையிலும் தமிழக அரசு வழங்குகிறது. இதுதவிர விவசாயிகளுக்கு மானியம், வீட்டு இணைப்பு மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டணத் தில் சலுகை வழங்கப்படுகிறது.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, மடிக்கணினி உள் ளிட்டவை வழங்கப்படுகின்றன. கிராமப்புற பெண்களுக்காக இலவச பசுமாடு, ஆடு, கோழி வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடியை அரசு செலவழிக்கிறது.
இந்த திட்டங்களுக்கு ஒதுக்கப் படும் நிதி தொடர்பாக கணக்கு தணிக்கைத் துறை நடத்திய ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது:
இலவசம் மற்றும் மானிய திட்டங்களுக்கு கடந்த 2013-14-ம் ஆண்டு ரூ.9,646 கோடியை செலவழித்த தமிழக அரசு, கடந்த 2016-17-ம் நிதியாண்டில் ரூ.16,092 கோடியை ஒதுக்கியது. ஆனால், இந்த நிதி கடந்த 2017-18-ம் நிதியாண்டில் ரூ.15,230 கோடியாக குறைந்தது.
கடந்த 2016-17-ல் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை திட்டங் களுக்கான மானியம் ரூ.1,693 கோடி குறைந்ததே காரணம் என்று தணிக்கைத் துறை கண்ட றிந்துள்ளது.
அதேபோல், கடந்த 2015-16-ல் ரூ.6,156 கோடியாக இருந்த திரு மணம், மகப்பேறு நிதியுதவி, மடிக் கணினி, சீருடை திட்டங்களுக்கான நிதியும் கடந்த ஆண்டு ரூ.4,433 கோடியாக குறைந்துள்ளது.
இதுதவிர, கடந்த 2015-16-ல் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டத் துக்கு 2016-17-ல் ரூ.933 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டம் கடந்த ஆண்டில் செயல்படுத்தப்பட வில்லை. அதேபோல், கடந்த 2015-16-ல் ரூ.235 கோடி ஒதுக்கப் பட்ட இலவச சைக்கிள் திட்டத் துக்கு 2016-17-ல் ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டது.
இதே திட்டத்துக்கு கடந்த ஆண் டில் ரூ.16 கோடி மட்டுமே ஒதுக் கப்பட்டுள்ளது. அதேநேரம் மருத் துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு 2015-16-ல் ரூ.928 கோடி, 2016-17-ல் ரூ.593 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டில் ரூ.1,734 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இலவச மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள் திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறைந்ததால், இலவச திட்டத்துக்கான ஒதுக்கீடு கடந்த 2016-17-ல் ரூ.4,444 கோடியும், கடந்த ஆண்டில் ரூ.4,443 கோடி யாக குறைந்துள்ளது. இவ்வாறு அந்த தணிக்கை துறை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.