அமித் ஷா - ஓபிஎஸ் சந்திப்பு

அமித் ஷா - ஓபிஎஸ் சந்திப்பு
Updated on
1 min read

சென்னை

மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் சந்தித்தார்.

மக்களவைக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில், 300-க்கும் மேற் பட்ட இடங்களைப் பிடித்த பாஜக, ஆட்சியைத் தக்க வைத்துக் கொண் டது. தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக ஒரு இடத்தைக் கூட பிடிக்க வில்லை. தேனி தொகுதி யில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.

அதன்பின், பிரதமரைத் தேர்வு செய்வதற்கான நிகழ்ச்சி மற்றும் பாஜக கூட்டணி கட்சித் தலைவர் களுக்கான விருந்து நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகி யோரை இருவரும் சந்தித்தனர்.

அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவிலும் இருவரும் பங்கேற்ற னர். உள்துறை அமைச்சராக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பதவியேற்றார். அப்போது அவ ரைச் சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கோரி யிருந்தார். ஆனால் சந்திக்க இயலவில்லை.

மரியாதை நிமித்த சந்திப்பு

இந்நிலையில், தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் முடிந்த வுடன், நேற்று முன்தினம் மாலை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். நாடாளுமன்ற வளாகத்தில் உள் துறை அமைச்சரும், பாஜக தேசி யத் தலைவருமான அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றாலும், தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவ ரிடம் விவாதித்ததாகக் கூறப் படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in