Published : 23 Jul 2019 07:25 AM
Last Updated : 23 Jul 2019 07:25 AM

ஹெல்மெட் தலை காக்கும்! தக்க சமயத்தில் உயிர் காக்கும்!!- தலைக்கவசம் அணிவதில் வாகன ஓட்டிகளுக்கு என்னதான் பிரச்சினை?

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ச்சியாக பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. ஹெல்மெட் அணியாமல் செல்வோரை போலீஸார் மடக்கிப் பிடிப்பது, வழக்கு பதிவது, அபராதம் விதிப்பது, அதையொட்டிய வாக்குவாதங்கள், தள்ளுமுள்ளுகள் ஆகியவை சென்னையின் அன்றாடம் காட்சிகளாகிவிட்டன.

எனினும், இத்தனை நடவடிக்கைகளுக்குப் பிறகும் கூட, ஹெல்மெட் முழுமையாக வாகன ஓட்டிகளின் தலையை சென்றடையவில்லை. எத்தனை முறை அபராதம் விதித்தாலும் கணிசமானோர் ஹெல்மெட் அணியாத நிலையே தொடர்கிறது. ஹெல்மெட் அணிவதை தவிர்ப்பதற்கு என்னதான் காரணம் இருக்கமுடியும் என்பது பற்றி பல்வேறு துறை நிபுணர்கள், பொதுமக்களின் கருத்துகளை ‘இந்து தமிழ்’ நாளிதழ் நிருபர் குழு கேட்டறிந்த விவரத்தின் தொகுப்பே இந்தச் சிறப்புச் செய்தி.

சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா உட்பட இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் ஒரு தனியார் நிறுவனம் ஹெல்மெட் குறித்து சமீபத்தில் கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில், 43 சதவீதம் பேர் மட்டுமே ஹெல்மெட் அணி கிறார்கள் என்றும் அவர்களில் 16 சதவீதம் பேர் மட்டுமே முழுமனதுடனும் 13 சதவீதம் பேர் சட்டம் மற்றும் அபராதத்துக்கு பயந்தும் 22 சதவீதம் பேர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கட்டாயப்படுத்து வதற்காக அணிகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர். ஆக, 57 சதவீதம் பேர் ஹெல்மெட் பற்றி யோசிக்கக் கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஹெல்மெட் அணிய விரும்பாதவர்கள் சொல்லும் காரணங்கள் என்ன?

“குண்டும் குழியுமான, குறுகிய சாலைகள், விதிமீறிய வாகன இயக்கம் போன்றவற்றால் மட்டுமே விபத்துகள் நடக்கின்றன. எனவே அடிப்படை தேவையான சாலை வசதிகளை செய்து கொடுத்துவிட்டு, அப்புறம் ஹெல்மெட் அணியச் சொல்லுங்கள்”

“பாதாளச் சாக்கடை குழியால் ஏற்படும் விபத்து களை சரி செய்வதற்கு ஏன் அதிகாரிகளை கட்டாயப்படுத்தவில்லை. உயர் பதவியில் இருப்பவர்கள் வசிக்கும் பகுதிகளில் சாலைகள் தரமாக உள்ளன. அதேபோல் அனைத்து பகுதி களிலும் தரமான சாலை அமைத்துவிட்டு, பின்னர் ஹெல்மெட் அணியச் சொல்லட்டும்”

“பல விபத்துகள் மது அருந்திவிட்டு வாக னத்தை இயக்குவதால்தான் நடக்கின்றன. இது அரசுக்கும் தெரியும். எங்களின் உயிர்மேல் அக்கறை இருந்தால் முதலில் டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லுங்கள். ஹெல்மெட் உயிரிழப்பை விடவும் மதுவால் ஏற்படும் உயிரிழப்புகளும் அனுபவிக்கும் பிரச்சினைகளும் அதிகம்”

“நகரின் பல பகுதிகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி உள்ளன. தேவையற்ற இடங்களில் வானகங்களை நிறுத்துவதால் நெரிசல் ஏற்படுகிறது. எனவே அதை ஒழுங்குபடுத்துவதுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள். நாங்கள் ஹெல்மெட் அணி கிறோம்”

“ஹெல்மெட் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங் களுக்கு சாதகமாக அரசாங்கம் செயல்படுகிறது. வெயிலில் செல்லும் எங்களின் வலி மேல் மட்டத்தில் இருப்பவர்களுக்கு புரியாது. ஒரு நாள் அதிகாரிகள் ஹெல்மெட் அணிந்து சென்னை சாலைகளில் வாகனம் ஓட்டினால் எங்களின் கஷ்டம் புரியும்”

பைக் ரேஸ் வீரர் அகலின் என்பவர் நம்மிடம் கூறும்போது, “எந்த சாலையில் எப்படி வாகனம் ஓட்ட வேண்டும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஒரு சாலையில் எந்த டிராக்கில் செல்ல வேண்டும் என்பது போன்ற அடிப்படை போக்குவரத்து விதிகள் தெரியாததால் விபத்து கள் நடக்கின்றன. எனவே இந்த அடிப்படை போக்குவரத்து விதிகள் பற்றித் தெரியாமல் ஹெல்மெட் அணிவதில் எந்தப் பயனும் இல்லை” என்றார்.

‘‘தேசிய, மாநில நெடுஞ்சாலை கள், நகருக்குள் இருக்கும் பிரதான சாலைகளில் ஹெல்மெட் அணி யாமல் வாகனம் ஓட்டுவது கண்டிப்பாகத் தவறுதான். அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பது நியாயமே. ஆனால் குடியிருப்புகளுக்கு அருகே, சிறிய சாலைகளிலும் தெருக்களிலும் நின்றுகொண்டு ஹெல்மெட் சோதனை என்ற பெயரில் மக்களை போலீஸார் சிரமத்துக்கு உள்ளாக்குகின்றனர்’’

இப்படி பல்வேறு கருத்துகளை தங்களின் புரிதலுக்கு ஏற்றவாறு பலர் தெரிவித்தனர்.

வீட்டில் இருந்து பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது பெற்றோரை வழி மறிப்பது, தெரு கடைகளுக்குச் செல்பவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்வது போன்ற நடவடிக்கைகளால் போலீஸார் மீது மக்களுக்கு அதிருப்தி கிளம்புகிறது.

மேலும் 'வெள்ளைச் சட்டை' அணிந்திருக்கும் போக்குவரத்து போலீஸார் மட்டுமே அபரா தம் வசூலிக்கலாம். அவரிடம்தான் அபராததுக் கான ரசீது புத்தகம் அல்லது இ-செலான் கருவி இருக்கும். அதேநேரம் ‘காக்கி சட்டை' போட்டிருக்கும் சட்டம் ஒழுங்கு போலீஸார் வாகனத்தை நிறுத்தி சோதனையிடலாம். ஆனால் அபராதம் வசூலிக்கும் அதிகாரம் கிடையாது. (அவ்வாறு அபராதம் வசூலித்தால் 100-ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்) ஆனால் பெரும்பாலான இடங்களில் காக்கி சட்டை போலீஸாரே சோதனை செய்கின்றனர்.

போலீஸாரின் நிலை

இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் தரப்பில் கூறும்போது, ‘ஹெல்மெட் சோதனையின் போது பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்களால் பதில் அளிக்க முடியவில்லை. வாங்கும் அபராத பணத்துக்கு ஒரு ஹெல்மெட்டை எங்களுக்கு கொடுக்கலாமே,ஒழுங்காக சாலை போடுவதில்லை, அபராதம் மட்டும் வசூலிப்பீர்களா என்றெல்லாம் எங்களிடம் கேள்வி எழுப்புகின்றனர். எங்களால் என்ன சொல்ல முடியும்” என குமுறுகின்றனர்.

ஆய்வாளர் என்.சுகுணா (அடையாறு) கூறும் போது, “பெரும்பாலான சாலைகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்தாலும் சில இடங்களில் இருக்கும் மேடு பள்ளங்கள் விபத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இதை தவிர்க்க சாலை பராமரிப்பு பணிகளை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்” என்றார்.

உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் கூறும்போது, “‘சட்டம் இயற்றும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு கிடையாது. ஒரு விதியை அமல்படுத்த வேண்டுமெனில் அரசாங்கம்தான் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். எத்தனையோ முக்கிய வழக்குகள் நீதிமன்றத்தில் தேங்கி கிடக்கின்றன. ஹெல்மெட் அணிவதில் நிறைய கேள்வி பதில்களும் உள்ளன. விபத்து ஏற்படும்போது ஹெல்மெட் அணிந்து செல்பவர்களும் உயிரிழக்கும் சம்பவங்களும் இருக்கத்தான் செய்கின்றன. உடலே நசுங்கிவிடும்போது தலையை மட்டும் பாதுகாப்பதன் மூலம் என்ன பலன். புள்ளி விவரங்களின் அடிப்படையில்தான் மோட் டார் வாகன சட்ட விதிகளே உரு வாக்கப்படுகின்றன. ஹெல் மெட் அணிவது கட்டாயம் தான். மறுக்கவில்லை. மக்களின் வசதிக்காகத் தான் சட்டங்களும் நீதிமன்றங்களும் அரசாங் கமும் இருக்க வேண்டுமேயன்றி, மக்களை சிரமப்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது. எல்லாமே சட்டத்தின் அடிப்படையில்தான் நடக் கிறது என்றால் நாட்டில் லஞ்சமும் ஊழலும் எந்த சட்டத்தின் அடிப்படையில் நடக்கிறது. அதை ஏன் நம்மால் அறவே ஒழிக்க முடியவில்லை” என அவர் வேறு ஒரு கோணத்தில் கருத்து தெரிவித்தார்.

82 பேர் உயிரிழப்பு

சென்னையில் 2017-ம் ஆண்டு நிகழ்ந்த வாகன விபத்துகளில் 1,347 பேர் உயிரிழந்துள்ளனர். 7,200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இருசக் கர வாகன விபத்துகளில் மட்டும் 731 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 47 பேர் ஹெல் மெட் அணிந்திருந்த நிலையில் உயிரிழந்தவர்கள்.

இதேபோல், கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதியுடன் நிறைவடைந்த இரண்டரை ஆண்டுகளில் 3,327 பேர் வாகன விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இதில் 18,783 பேர் காயமடைந்துள்ளனர். இதில் இருசக்கர வாகன விபத்துகளில் மட்டும் 1,903 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 82 பேர் ஹெல்மெட் அணிந்திருந்த நிலையிலும் உயிரிழந்தவர்கள்.

ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 2017-ல் 3 லட்சத்து 43,349 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இதேபோல், கடந்த 30-ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டரை ஆண்டுகளில் 14 லட்சத்து 89,751 வழக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னை ஐஐடி பேராசிரியர் ஒருவர் கூறும்போது, “சென்னையில் மொத்தமுள்ள வாகனங்களில் சுமார் 50 சதவீதம் இருசக்கர வாகனங்கள் ஓடுகின்றன. விபத்துகளைத் தவிர்க்க பெரிய நகரங்களின் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தனிப்பாதை அமைக்கலாம். இதனால், சாலைகளில் போக்கு வரத்து நெரிசல் குறைவதோடு, விபத்துக்களையும் கணிசமாக குறைக்க முடியும்” என்றார்.

பொதுமக்கள் கருத்து

குளிர்பான வியாபாரி எம்.சரவணன் (மணலி): பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது நடைமுறை பிரச்சினைகளை உருவாக்கும். இதனால் வெளி யூர் செல்பவர்களை வழியனுப்ப அழைத்துச் செல்ல முடியாது. லிப்ட் கேட்பவர்களுக்கு தரமுடியாது. எனவே, பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

அயனாவரத்தைச் சேர்ந்த சி.எஸ்.செல்வம்: தரமற்ற சாலை, கடும் வெயிலால் அசவுகரியத்தை ஏற்படுத்து கிறது.

கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த சந்திரிகா: திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது ஹெல் மெட்டை பாதுகாப்பதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக பெண்கள் அணியும் ஹெல்மட்டை லாக் செய்யும் வசதி இல்லை. இரவு நேரத்தில் எதிரே வரும் வாகனங்களின் விளக்கு வெளிச்சம் ஹெல்மெட் கண்ணாடியில்பட்டு கண்களை கூசச் செய்கிறது. இது வாகனத்தை இயக்குவதில் கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

என்ன செய்யலாம்?

ஹெல்மெட் விவகாரம் குறித்து போக்கு வரத்துத்து துறையைச் சேர்ந்த அதிகாரி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:

உயர் நீதிமன்ற உத்தரவு முழுமையாக அமலாக வேண்டும். அதேநேரம், அதுகுறித்த விழிப்புணர்வு மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும். அதற்கு இது ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். உத்தரவிட்டு கட்டாயப்படுத்தி நடைமுறைப்படுத்துவதைவிட இயல்பான மாற்றத்துக்கான வழிகளை ஆராய வேண்டும்.

சென்னைபோன்ற பெருநகரங்களில் வாகனப் போக்குவரத்து அதிகமிருக்கும். எனவே சாலை களில் குறிப்பிட்ட இடைவெளியில் வேகத்தடை களை வைக்கலாம். இதன்மூலம் வேகத்தால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த முடியும். வேகக் கட்டுப்பாட்டை கறாராக நடைமுறை படுத்துவதுடன் சட்டவிரோதமாக நடத்தப்படும் பைக் ரேஸ் போன்ற அபாயகரமான வாகன இயக்கத்தை தடுக்க கடுமையான நடவடிக் கைகளை எடுக்க வேண்டும்.

குறுஞ்சாலைகள், தெருக்களில் இந்த ஹெல் மெட் சோதனையை தவிர்க்கலாம். அதே நேரம் சென்னை நகருக்கு வெளியே நெடுஞ்சாலைகளில் செல்லும்போது ஹெல் மெட் அணிவதை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த லாம். இருசக்கர வானகனங்களுக்கென தனிப்பதை ஏற்படுத்தி அதில் மட்டுமே செல்ல வகை செய்யலாம்.

தமிழகத்தின் பெரும்பாலான பெண்கள் தலைமுடி வாரி சீவி ஜடை பின்னுவது அல்லது கொண்டை போடுவது மற்றும் பூச்சூடுவது போன்ற பழக்கமுடையவர்கள். இதனால் தலை முடியை சிரத்தையுடன் பராமரிக்கிறார்கள். இதனால் பெண்கள் ஹெல்மெட் அணிவதை விரும்புவதில்லை. சீக்கியர்களுக்கு அணிவதில் விலக்கு அளித்திருப்பதைப்போல பெண்களின் அசவுகரியத்தை கணக்கிட்டு பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு மட்டுமாவது விலக்கு அளிக்கலாம்.

எந்தச் சங்கடங்களும் இன்றி மக்கள் முழுமை யாக ஹெல்மெட்டை அணியும்வரை தொடர் விழிப்புணர்வு இயக்கங்களை அரசும் தனியாரும் தொண்டு நிறுவனங்களும் பள்ளி கல்லூரிகளில் இருந்தே தொடங்கலாம். பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்றுபவர்களாக இருப்பது எல்லா வற்றையும்விட முக்கியம்.

இவ்வாறான தொடர் நடவடிக்கைகளால் இன்று சுணக்கம் இருந்தாலும் ஒருநாள் நிச்சயம் இதன் அவசியத்தை உணர்ந்து, ஹெல்மெட் அணிவதை அன்றாட பழக்கவழக்கங்களில் ஒன்றாக மாற்றிக் கொள்வார்கள். இவ்வாறு அவர்கள் நம் பிக்கை ெரிவித்தனர்.

புதிதாக அணிபவர் கவனத்துக்கு…

புதிதாக ஹெல்மெட் அணிபவர்களுக்கு சில டிப்ஸ்:

ஹெல்மெட் அணிவது குதிரைக்கு கண் பட்டை கட்டுவதுபோல. சாதாரணமாக 40 டிகிரி கோணத்தில் பின்னால் வரும் வாகனங்களை அறிந்து கொள்ள முடியும். ஆனால் ஹெல்மெட் அணிந்தால் ஓரத்தில் வரும் வாகனங்கள் தெரியாது. எனவே, இரு பக்கமும் கண்ணாடி (சைடு மிரர்) இருப்பது அவசியம்.

ஹெல்மெட்டின் உட்பகுதிக்குள் காதுகள் பக்கத்தில் குழி போன்ற இடைவெளி இருக்கும் ஹெல்மெட்டையே அணிய வேண்டும். பின்னால் வரும் வாகனங்களின் ஒலியை அப்போதுதான் நம்மால் கேட்டு வாகனத்தை இயக்க முடியும்.

புதிதாக ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டும்போது குறைந்த வேகத்திலேயே செல்வது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் வேகத்தை கூட்டி செல்ல வாய்ப்புள்ளது. எனவே ஸ்பீடா மீட்டரில் வேகத்தின் அளவை பார்த்து பாதுகாப்பான வேகத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும். தலையின் அளவுக்கு ஏற்ப எடை குறை வான ஹெல்மெட் வாங்க வேண்டும். அதிக இறுக்கம் அல்லது தளர்வாக அணியக் கூடாது.

அதிக எடை கொண்ட ஹெல்மெட்டுகளை பயன்படுத்தினால் கழுத்து எலும்பில் பாதிப்பு ஏற்படும். கழுத்தை தொடர்ந்து முதுகு தண்டு வடப் பிரச்சினை, முடி உதிர்வு, அதிக வியர் வையால் ஈரம் தலையில் தேங்குவதால் சைனஸ் மற்றும் சளித் தொந்தரவுகள், கண்ணாடி அணிப வர்களுக்கு பார்வை குறைபாடு போன்றவை ஏற்படலாம். மேலும் தலையில் வெப்பம் அதிகரித்து அதிகமான வியர்வை வெளி யேறி நாற்றமடிக்கும். அதனால், ஹெல் மெட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன், தலைக்கு ஏற்ற சரியான ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையெனில் செவித்திறன் பாதிக்கும் என டாக்டர்கள் தெரி விக்கின்றனர்.

ஹெல்மெட் உருவான கதை

1935-ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த லாரன்ஸ் ஆஃப் அராபியா என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்தில் சிக்கி, தலையில் அடிபட்டு 6 நாள் கோமாவுக்குப்பிறகு இறந்துபோனார். லண்டன் மருத்துவர்களை இந்தச் சம்பவம் வெகுவாக பாதித்தது. 1941-ம் ஆண்டு ‘பிரிட்டிஷ் மெடிக்கல் சயின்ஸ் ஜர்னல்-க்கு டாக்டர் கெய்ர்ன்ஸ் என்பவர் தாக்கல் செய்த அறிக்கையில் தலையை காப்பதற்கு ஒரு பொருள் தேவை எனக் குறிப்பிட்டார். பின்னர் ராணுவ வீரர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டது. மரம் மற்றும் ரப்பரை கொண்டு ஹெல்மெட் தயாரானது.

1953-ல் தெற்கு கரோலினா பல்கலைக் கழக பேராசிரியர் சி.எப்.லம்பார்டு ஹெல்மெட் டுக்குள் பஞ்சு போன்ற பொருட்களை வைத்து லேசான அதிர்வற்ற ஹெல்மெட்டை உருவாக் கினார். 1971-ம் ஆண்டு ராய் ரிச்சர்டு என்பவர் தான் நாம் இப்போது பயன்படுத்தும், தலை முழு வதும் மறைக்கும் ஹெல்மெட்டுகளை கண்டு பிடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x