சென்னையில் ‘இயோன்ஸ்’ இளைஞர் மாநாடு தொடங்கியது: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

சென்னையில் ‘இயோன்ஸ்’ இளைஞர் மாநாடு தொடங்கியது: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
Updated on
1 min read

சென்னையில் நடக்கும் ‘இயோன்ஸ்’ இளைஞர் மாநாட் டுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள், ‘இயோன்ஸ்’ என்ற பெயரில் சர்வதேச இளைஞர் தன்னார்வ தொண்டு அமைப்பு மாநாட்டை சென்னையில் நடத்து கின்றனர். நேற்று தொடங்கிய இந்த மாநாடு நாளை (26-ம் தேதி) வரை நடக்கிறது.

இதில் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பை பாங் லி மற் றும் வங்காரி முத மாத்தாய் ஆகிய இருவரும் கவுரவிக்கப்படு கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த மாநாட்டுக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றை முதல்வர் ஜெயலலிதா அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘அமைதி மற்றும் வளர்ச்சி’ என்பதை முக்கிய கருவாக கொண்டு சென்னையில் 24 முதல் 26-ம் தேதி வரை நடக்கும் ‘இயோன்ஸ்’ மாநாட்டுக்கு எனது வாழ்த்துக்கள். அமைதி மற்றும் வளர்ச்சி என்பது தமிழக அரசின் நிர்வாகத்துக்கான ஆதாரமாக அமைந்துள்ளது. இந்த மாநாடு இந்திய மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் இருந்து வரும் இளைஞர்களின் தலைமைப் பண்பை வளர்க்கும். லாப நோக்கின்றி நடத்தப்படும் இந்த மாநாடு, பல்வேறு நாட்டு இளைஞர்களிடையிலான கலந் துரையாடலுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.

பல்வேறு பணிகளின் காரண மாக என்னால் இந்த மாநாட்டில் பங்கேற்க இயலவில்லை. அமை திக்கான நோபல் பரிசு பெற்ற பை பாங் லி மற்றும் வங்காரி முத மாத்தாய் ஆகியோரை கவுரவிப்பதில் நானும் உங்களுடன் இணைந்து கொள்கிறேன்.

இயோன்ஸ் நிகழ்ச்சி அதற்கான இலக்குகளை எட்ட எனது வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள் கிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in