மார்த்தாண்டம் கூட்டுறவு சங்க தேர்தலில் பதிவான வாக்குச்சீட்டுகளுக்கு தீவைப்பு: காவலாளியை கட்டிப்போட்டு கும்பல் அட்டூழியம்

மார்த்தாண்டம் கூட்டுறவு சங்க தேர்தலில் பதிவான வாக்குச்சீட்டுகளுக்கு தீவைப்பு: காவலாளியை கட்டிப்போட்டு கும்பல் அட்டூழியம்
Updated on
1 min read

நாகர்கோவில்

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கூட்டுறவு சங்கத்துக்குள் புகுந்த மர்ம கும்பல், காவலாளியை தாக்கி கட்டிப் போட்டுவிட்டு, கூட் டுறவு சங்க தேர்தலில் பதிவான வாக்குச்சீட்டுகளை தீவைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்றது.

மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் வெட்டுவெந்நியில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்துக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடை பெற்றது. தேர்தலில் முறைகேடு நடந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து, வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட் டது. வாக்குச்சீட்டுகள் அடங்கிய இரும்பு பெட்டி கூட்டுறவு சங்க அறையில் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்தது.

இதற்கிடையே நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு கும்பல் கூட்டுறவு சங்கத்தின் சுற்றுச்சுவர் வழியாக ஏறி உள்ளே புகுந்துள்ளது. பாதுகாப்புக்கு நின்ற காவலாளி கனகராஜை அவர்கள் தாக்கி கட்டிப் போட்டுள்ளனர். பின்னர் கூட்டுறவு சங்க அறைக்குள் புகுந்து, அங்கிருந்த வாக்குப் பெட்டியை தரையில் தூக்கிப் போட்டு உடைத்துள்ளனர். அதிலிருந்த வாக்குச்சீட்டுகளை எடுத்து தீவைத்து எரித்துவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

போலீஸார் விசாரணை

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தக்கலை டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கூட்டுறவு சங்கத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் ஹார்டு டிஸ்க் ஆகியவற்றையும் அந்த கும்பல் எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது.

கூட்டுறவு சங்கத்தின் அருகில் உள்ள வீடுகள், நிறுவனங்களில் பொருத்தப்பட்டிருந்த கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் இதில் ஈடுபட்ட வர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in