

சென்னை
அன்சருல்லா தீவிரவாத அமைப் புடன் தொடர்பில் இருக்கும் மேலும் சிலரை கைது செய்யும் முயற்சியில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
‘அன்சருல்லா’ என்ற தீவிரவாத அமைப்பை இந்தியாவில் தொடங் குவதற்காகவும் அதற்கான நிதி ஆதாரங்களை சேர்ப்பதற்காகவும் சிலர் முயற்சி செய்து வருவதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சவுதி அரேபியாவில் பணிபுரிந்து கொண்டே, அன்சருல்லா தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல் பட்டு வந்த தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் இந்தியாவுக்கு நாடு கடத் தப்பட்டனர். அவர்களை தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். அவர்க ளிடம் தற்போது காவலில் விசா ரணை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் 14 பேரின் வீடுகளி லும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அவர்களின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவ ணங்களை ஆய்வு செய்து வரு கின்றனர்.
இதற்கிடையே, 14 பேரிடம் காவலில் நடத்தப்பட்ட விசாரணை யில், அன்சருல்லா அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படும் வேறு சிலரின் தகவல்கள் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன.
மேலும், இந்த 14 பேரையும் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்ட முக்கியமான ஒருவர் குறித்த தகவலும் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. அவர் உட்பட பலரை கைது செய்யும் முயற்சியில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் அசம்பாவித சம்பவங்களை செய்யும் தீவிர வாத இயக்கங்களுக்கு நிதி கொடுக்க சில அமைப்புகள் தயாராக இருக்கின்றன. இந்த நிதியை பெறுவதற்காகவே புதிய தீவிரவாத இயக்கங்களை உரு வாக்கி, அசம்பாவித சம்பவங் களை நடத்துவதற்கு முயற்சி செய்கின்றனர்.
இந்த நிதி கொடுக்கும் அமைப்பு களை கண்டறிந்து, அதை தடுக் கும் முயற்சியில் ஈடுபட்டு வருகி றோம் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.