

சென்னை
ரயில்வே பாதுகாப்பு படை காலிப்பணியிடங்களில் முன்னாள் ராணுவத்தினரை பணியமர்த்த லாம் என மண்டல பொது மேலா ளர்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய ரயில்வேயில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) பிரி வில் மொத்தம் 76,563 பேர் பணியாற்றி வருகின்றனர். ரயில் கள், ரயில் நிலையங்களில் பாது காப்பு, ரயில் சரக்கு முனையங் களை கண்காணித்தல்,ரோந்து பணிகள், ரயில் சொத்துகளை பாதுகாத்தல், முன்பதிவு மையங் களில் பாதுகாப்பு என 30-க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
தினமும் 2,500 விரைவு ரயில்களின் பாதுகாப்பு பணிக்கு 12,000 பேர் தேவைப்படுகிறார்கள். எனவே, ரயில்வே பாதுகாப்பு படை பிரிவில் உள்ள காலியிடங் களில் முன்னாள் ராணுவத்தினரை பணியமர்த்த அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட் டுள்ளது.
இதற்கு முன்பு ஹோம் கார்டைச் சேர்ந்தவர்களை ரயில்வே பாது காப்பு படை காவலர்களாக பணிய மர்த்த அனுமதித்திருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவில் ஹோம் கார்டுகள் சேராததால் காலிப்பணியிடங்களில் முன்னாள் ராணுவத்தினரை நியமிக்கலாம் என ரயில்வே வாரியம் உத்தர விட்டுள்ளது.
இதுதொடர்பாக டிஆர்இயு துணை பொதுச்செயலாளர் மனோ கரன் கூறும்போது, “ரயில்வேயில் பாதுகாப்பு பணி முக்கியமானது. இதில், தினக்கூலிகளாக பணிய மர்த்தப்படுபவர்கள் அவசியமான சூழலில் பணிக்கு வராமலோ, பணியில் கவனக்குறைவாக இருந் தாலோ, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது. பாதுகாப்பு பணிகளுக்கு இளம் வயதினரை பணியமர்த்துவதே சிறந்தது. இதனால், இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். நிரந்தர காவலர்களை ரயில்வே தேர்வு செய்வதே சிறந்தது. எனவே, ரயில்வே பாதுகாப்பு படை காவலர்களாக முன்னாள் ராணுவத்தினரை பணியமர்த்தும் திட்டத்தை ரயில்வே வாரியம் கைவிட வேண்டும்.’’ என்றார்.