

சென்னை
அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக் கள் முற்றுகையால் வேலூர் மக்க ளவைத் தொகுதியில் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
பணப் பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப் பட்டது. இந்நிலையில், அந்த தொகு தியில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் அக்கட்சியின் பொரு ளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்ளிட்டோர் போட்டிடுகின்றனர்.
வேட்புமனுக் களை திரும்பப் பெற இன்று கடைசி நாளாகும். இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும். அதன்பிறகு சுயேச்சை வேட்பாளர் களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 37 தொகுதி களில் வெற்றி பெற்றது. ஆளும் அதிமுக, தேனி மக்களவைத் தொகுதியில் மட்டுமே வென்றது. வேலூர் தொகுதியில் வெற்றி பெறாவிட்டால் 37 தொகுதிகளில் பெற்ற அமோக வெற்றியின் மகிழ்ச்சியும், உற்சாகமும் இல்லாமல் போய்விடும். அதிமுக அரசை வீழ்த்தும் முயற்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என திமுக கருதுகிறது. எனவே, திமுக முதன்மைச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக் கள், மாவட்டச் செயலாளர்கள் என 70-க்கும் அதிகமானோர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.
அதே நேரத்தில் 37 தொகுதிகளில் தோல்வி அடைந்த அதிமுக, இழந்த செல்வாக்கை மீட்கவும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் ஆட்சியை நடத்தவும் வேலூரில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என நினைக்கிறது.
எனவே, சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அமைச்சர் கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் என 200-க்கும் மேற்பட்டோரை கொண்ட குழுவை அதிமுக அமைத்துள்ளது.
அதிமுக, திமுக வேட்பாளர்கள் ஏற்கெனவே தங்களது பிரச்சா ரத்தை தொடங்கிவிட்டனர். பிரச் சாரத்துக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. சட்டப்பேர வைக் கூட்டத் தொடர் கடந்த 20-ம் தேதி நிறைவு பெற்றுள்ளது. எனவே, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தை நேற்று தொடங்கினர்.
வேலூர் மக்களவைத் தொகு திக்குட்பட்ட வேலூர், அணைக் கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளி லும் அதிமுக, திமுக சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர், நிர்வாகி கள், தொண்டர்கள் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் செய்கின்றனர்.
அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண் முகத்துக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஒரு வாரம் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணி கட்சித் தலைவர் களான தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், பாமக நிறுவனர் ராம தாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பிரச் சாரம் செய்ய உள்ளனர். இதுதவிர சில மத்திய அமைச்சர்களும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ள தாக கூறப்படுகிறது.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந் துக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒரு வாரம் தீவிர பிரச்சாரம் மேற் கொள்ள உள்ளதாக கூறப்படு கிறது. அத்துடன் திமுக இளைஞர ணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க் சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத் தரசன், விசிக தலைவர் திருமாவள வன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்ய உள்ளனர். அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக் களின் முற்றுகையால் வேலூரில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.