

சென்னை
சவுதி ரியால் எனக்கூறி வெற்றுக் காகிதக் கட்டுகளை கொடுத்து நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட வடமாநில கும்பலைச் சேர்ந்த 8 பேரை திருவான்மியூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பர்வேஷ் ஆலம். சவுகார்பேட்டையில் செல்போன் டெம்பர் கிளாஸ் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 17-ம் தேதி இவரது கடைக்கு வந்த வட மாநில இளைஞர்கள் இருவர், தங்களிடம் ரூ.18 லட்சம் மதிப்பிலான சவுதி ரியால் உள்ளது. அவசர செல வுக்கு பணம் தேவைப்படுவ தால், மாற்றித்தரும்படி கேட்டுள் ளனர்.
சென்னை திருவான்மியூரில் பணம் இருக்கிறது. அங்கு வந்து நேரில் பார்த்துவிட்டு பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் பர்வேஷ் ஆலம் திருவான்மியூர் சென்றார்.
அங்கிருந்த வடமாநில இளை ஞர்கள் சவூதி ரியால் பணக்கட் டுகளைக் காண்பித்தனர். போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதால், கடைக்கு சென்று பிரித்துப்பாருங் கள் எனத் தெரிவித்துள்ளனர். ரூ.3 லட்சம் இந்திய ரூபாய் நோட் டுகளை வடமாநில இளைஞர் களிடம் கொடுத்துவிட்டு, அவர்கள் கொடுத்த பணப்பையை பர்வேஷ் ஆலம் வாங்கிச் சென்றார்.
காவல் நிலையத்தில் புகார்
கடைக்குச் சென்று பிரித்து பார்த்தபோது, பணக்கட்டுகளின் மேல்புறத்தில் ஒரு ரியால் நோட்டு மட்டுமே இருந்தது. மீதமிருந்த அனைத்தும் வெற்றுக் காகிதங் கள் என தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாற்றப்பட் டதை உணர்ந்த பர்வேஸ் ஆலம், திருவான்மியூர் காவல் நிலையத் தில் புகார் தெரிவித்தார்.
பணப் பரிமாற்றம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி களை கொண்டு வடமாநில மோசடி கும்பலைச் சேர்ந்த சுமன், பிலால், ஜாபர், ஜாகிர் உட்பட 6 ஆண்கள், 2 பெண்களை போலீஸார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் மட்டும் டெல்லியைச் சேர்ந்தவர் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கும்பல் சென்னையில் எத்தனை பேரிடம் இதேபோல் மோசடியில் ஈடுபட்டுள்ளது என வும் விசாரணை நடைபெற்று வருகிறது.