

சென்னை
வண்ணாரப்பேட்டை - திருவொற்றி யூர் இடையே தண்டவாளங்கள், சிக்னல் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தத் தடத் தில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை யில் இருந்து திருவொற்றியூர் இடையே மெட்ரோ ரயில் வழித்தட முதல்கட்ட நீட்டிப்பு திட்டத்துக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். மொத்தம் 9 கிமீ தூரம் உள்ள இந்த வழித்தடத் தில் 8 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சர் தியாகராயா கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார் பேட்டை, டோல்கேட், தாங்கல், கவுரிஆஷ்ரம், திருவொற்றியூர், விம்கோநகர் பகுதியில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி கள் கூறும்போது, ‘‘மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் ரூ.3,700 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, இந்தத் தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி கள் நிறைவடைந்து, தண்டவாளங் கள், சிக்னல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
செலவுகளைக் குறைக்கும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்தத் தடத்தில் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன்பிறகு, இந்தத் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங் கப்படும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.