‘பாடி வோன் கேமராஸ்' சோதனை முயற்சி வெற்றி: போக்குவரத்து போலீஸாருக்கு 202 கேமராக்கள்; 15 அடி தூரத்தில் நின்று பேசினால்கூட ஒலி, ஒளியைப் பதிவு செய்ய முடியும்

போக்குவரத்து காவலரின் சட்டையில் பொருத்தப்பட்டுள்ள கேமரா. (கோப்புப் படம்)
போக்குவரத்து காவலரின் சட்டையில் பொருத்தப்பட்டுள்ள கேமரா. (கோப்புப் படம்)
Updated on
2 min read

இ.ராமகிருஷ்ணன்

சென்னை

போக்குவரத்து போலீஸார் வாகன ஓட்டிகளிடம் நடத்தும் விசாரணை கள் குறித்து அறிய நவீன ‘பாடி வோன் கேமராஸ்' சென்னையில் பரிசோதனை முறையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அது வெற்றி பெற்றதையடுத்து புதிதாக 202 கேமராக்கள் வாங்கப் பட்டுள்ளன.

சென்னை தரமணியில் போக்கு வரத்து போலீஸார் தாக்கியதாக வும், தகாத முறையில் பேசியதாக வும் கூறி திருநெல்வேலியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கார் ஓட்டுநர் கடந்த ஆண்டு உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சம்பவம் போக்குவரத்து போலீஸார் மீது பொதுமக்களுக்கு அதிருப்தியையும், தவறான சிந்த னையையும் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீ ஸார் மற்றும் வாகன ஓட்டிகளி டையே மோதலைத் தடுக்கும் வகையிலும், உண்மை நிலையை தெரிந்து கொள்ளும் வகையிலும் ‘பாடி வோன் கேமராஸ்’ (Body worn Cameras) என்ற நவீன கேமராக் களைப் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் சோதனை முறை யில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் சென்னையில் அறிமுகம் செய்த னர்.

முதல்கட்டமாக சென்னையில் தேனாம்பேட்டை, மெரினா, கோயம் பேடு, பூக்கடை ஆகிய 4 போக்கு வரத்து காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டன. இந்தக் கேம ராவை சம்பந்தப்பட்ட போக்குவ ரத்து ஆய்வாளர் வாகன சோதனை யின்போது தனது சீருடையின் முன் பகுதியில் பொருத்திக் கொள்ள வேண்டும். இதனால், போக்குவரத்து போலீஸார் கையூட்டு வாங்குவது முற்றிலும் தடுக்கப்படும்.

மேலும் வாகன ஓட்டிகள் தகராறில் ஈடுபட்டாலும், நேர்மை யாக செயல்படும் போக்குவரத்து போலீஸார் மீது பொய்யான குற்றச் சாட்டுகளையும் கூற முடியாது. இதனால், இது பொதுமக்கள் மற்றும் போலீஸாரிடையே வர வேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சென்னை போக்குவ ரத்து போலீஸாருக்காக தற்போது புதிதாக 202 ‘பாடி வோன் கேமராஸ்’ வாங்கப்பட்டுள்ளன. அவை இந்த வாரத்துக்குள் சம்பந்தப்பட்ட போலீ ஸாருக்கு வழங்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கேமராவின் சிறப்பு

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, "போக்குவரத்து போலீஸாருக்கான ‘பாடி வோன் கேமராஸ்’ எதிரில் உள்ள வாகன ஓட்டிகளை தெளி வாகப் படம் பிடிக்கும். மேலும் போலீஸார் மற்றும் வாகன ஓட்டி களின் உரையாடல்கள் துல்லிய மாக பதிவாகும். 15 அடி தூரத்தில் நின்று பேசினால் கூட ஒலி, ஒளியைப் பதிவு செய்ய முடியும். 360 டிகிரி சுழலும். 15 நாட்கள் வரை தொடர்ந்து பதிவு செய்து கொள்ள முடியும்.

ஜிபிஎஸ் கருவியை கேமராவில் பொருத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட போக் குவரத்து காவலர் எங்கு உள்ளார் என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்கலாம்" என்றனர்.

போக்குவரத்து காவல் ஆய் வாளர்கள் கூறும்போது, ‘‘ஒரு சிலரைத் தவிர நேர்மையான அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உள்ளனர். அவர்கள் மீது சில நேரங்களில் தேவையற்ற விமர் சனம், குற்றச்சாட்டுகள் எழும். ‘பாடி வோன் கேமரா’ நேர்மையாக செயல்படும் போலீஸாருக்கு கவசம் போன்றது" என்றனர்.

கேரளா, தெலங்கானாவில் ஏற் கெனவே இந்தத் திட்டம் உள்ளது. கடந்த வாரம் நெல்லையிலும் அறி முகம் செய்யப்பட்டது. தற்போது சென்னையிலும் முழு அளவில் ‘பாடி வோன் கேமராஸ்’ பயன்பாட்டுக்கு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in