Published : 22 Jul 2019 07:56 AM
Last Updated : 22 Jul 2019 07:56 AM

கொடைக்கானல் மலைகளில் காய்த்து குலுங்கும் ஆப்பிள்கள்: மலை விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் கொத்துக் கொத்தாக காய்த்துக் குலுங்கும் ஆப்பிள் பழங்கள்.

பி.டி. ரவிச்சந்திரன்

கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானல் மலைப் பகுதிகளில் ஆப்பிள் காய்த்துக் குலுங்குவதால் மலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் மிகக் குளிரான தட்பவெப்பம் கொண்ட காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே ஆப்பிள் விளைகின்றன. தமிழகத்தில் திண் டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலையில் நிலவும் தட்பவெப்ப நிலையில் ஆப்பிள் விளையுமா என்ற சந்தேகம் இருந்தது.

எனவே கொடைக்கானலில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் சில தனியார் தோட்டங்களில் சில ஆண்டு களுக்கு முன்பு சோதனை முறை யில் ஆப்பிள் விளைவிக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக ஆப்பிள் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டன. இவை கடந்த ஆண்டு ஓரளவு விளைச்சல் கண்டுள்ளன.

காஷ்மீர் ஆப்பிள் போன்று இனிப்பாக இல்லாமல், சற்று புளிப்பு கலந்த சுவையுடன் கொடைக்கானல் ஆப்பிள் உள் ளது. இதற்கு தட்பவெப்ப நிலை யும், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் குளுமை குறைந்து வருவதும்தான் காரணம்.

புளிப்பு கலந்த இனிப்பு சுவை

தற்போது கொடைக்கானல் தோட்டக் கலை ஆராய்ச்சி நிலை யம் மற்றும் தனியார் தோட்டங் களில் பயிரிடப்பட்டுள்ள ஆப்பிள் மரங்களில் காய்கள் காய்க்கத் தொடங்கி உள்ளன. இவை ஒரு மாதத்தில் பழுத்து அறுவடைக்குத் தயாராகி விடும் என எதிர் பார்க்கப்படுகின்றன.

கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு ஆப்பிள் விளைச்சல் அதிக அளவில் உள்ளதால் ஆப்பிள் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு விளையும் ஆப்பிளின் புளிப்பு கலந்த இனிப்பு சுவைக்காகவே அதிக அளவில் வாங்கிச்செல்வர் என்பதால், கூடுதல் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x