Published : 22 Jul 2019 07:37 AM
Last Updated : 22 Jul 2019 07:37 AM

தமிழகத்தில் எந்த மாதத்தில், எந்த தேதியில் உள்ளாட்சித் தேர்தல்?; உச்ச நீதிமன்றத்தில் அட்டவணை தாக்கல்: சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி தகவல்

சேலம்

உள்ளாட்சித் தேர்தல் எந்த மாதத்தில், எந்த தேதியில் நடத் தப்படும் என்பது குறித்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 21,495 பேருக்கு ரூ.26.37 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினி வழங்குதல், மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு (அடையாள அட்டை) வழங்குதல், தாரமங்கலத்தில் ரூ.24.10 கோடி யில் அமைக்கப்பட்ட புதிய புற வழிச்சாலையைத் திறந்து வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர் ராமன் வரவேற்புரை ஆற்றினார்.

முதல்வர் பழனிசாமி விழா வுக்கு தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினிகளை வழங்கி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி னார். நிகழ்ச்சியின்போது, முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

நெடுஞ்சாலைத்துறை அமைச்ச ராக இருந்த காலத்தில் இருந்து, தற்போது வரை சேலம் மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகம் முழுவ தும் பல்வேறு சாலைகளை சீரமைத் திருக்கிறோம். சாலைகளுக்காக, நிலம் கையகப்படுத்துவதில் பல் வேறு பிரச்சினைகள் ஏற்படு கின்றன. மக்கள் மனமுவந்து நிலம் கொடுத்தால்தான் புதிய சாலைகளை அமைத்து, விலை மதிக்க முடியாத உயிர் சேதத்தை தவிர்க்க முடியும். பயண நேரத்தையும் குறைக்க முடியும். போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுதான் எங்களுடைய லட்சியம்.

ராணுவத் தளவாட ஆலை

சேலம் இரும்பாலைக்கு சொந்த மான நிலத்தின் ஒரு பகுதியில், ராணுவத்துக்கான தளவாடங்கள், உதிரி பாகங்களை உற்பத்தி செய் வதற்கு மிகப்பெரிய தொழிற்சாலை விரைவில் அமைக்கப்படும். இதன் மூலமாக, நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர். விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்யவும், அவற்றுக்கு உரிய விலை கிடைக்கவும் சென்னைக்கு அருகே ரூ.2 ஆயிரம் கோடி மதிப் பில் உணவுப் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

காவிரி, தென்பெண்ணை, வைகை உட்பட தமிழகத்தில் உள்ள ஆறுகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும், அவற்றை சுத்திகரிக்கவும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

காவிரி நதி சுத்திகரிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு இசைவு தெரிவித்துள்ளது. காவிரியில் 3 இடங்களில் தடுப் பணைகள் கட்டப்படும். அனைத்து கிராமங்களிலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் முதல்வர் பழனிசாமி நிருபர்களிடம் கூறிய தாவது:

தமிழக அரசின் நிதி நிலை குறித்து சட்டப்பேரவையில் துணை முதல்வர் தெளிவாக கூறியிருக் கிறார். அரசின் நிதி ஆதாரத்தை பெருக்கவும், மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதியைப் பெறவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அணைகள் பாது காப்பு மசோதாவை முதலில் எதிர்த்தது அதிமுக அரசுதான். மசோதாவில் தமிழகத்துக்கு சாதகமான அம்சங்கள் இருந்தால் வரவேற்போம். எதிரான அம்சங்கள் இருந்தால் அதை எதிர்ப்போம்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி நிம்மதியான தரிசனம் கிடைப்ப தற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப் படும். இதற்கான திட்டங்களை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சேலம் உருக் காலையை தனியார் மயமாக்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். தொடர்ந்து வலியுறுத்துவோம்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு வரையறை முடிவடைந் துள்ளது. தேர்தலை எந்த மாதத் தில், எந்த தேதியில் நடத்துவது என்பது குறித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு தல்படி தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கப்படும். மழைநீர் ஒரு சொட்டுகூட வீணாகக்கூடாது என் பதற்காக, நீர் மேலாண்மை திட் டத்தை உருவாக்கி செயல்படுத்த இருக்கிறோம் என்றார்.

நிகழ்ச்சியில் அதிமுக மாநிலங் களவை எம்பி சந்திரசேகரன், சேலம் மக்களவைத் தொகுதி எம்பி பார்த்திபன், எம்எல்ஏ.க்கள் செம்மலை, ராஜா, வெங்கடாசலம் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x