

தூத்துக்குடி
சென்னையில் உடல்நலக்குறை வால் காலமான சரவணபவன் நிறுவனர் ராஜகோபாலின் உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புன்னைநகரில் அடக்கம் செய்யப்பட்டது.
பிரின்ஸ் சாந்தகுமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சரவணபவன் ராஜகோபாலுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. உச்ச நீதிமன்ற மும் இதனை உறுதி செய்தது. அவரது உடல் நிலை மோசமான நிலையில் இருந்ததால், அவர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை கைதிகளுக்கு சிகிச்சை அளிக் கும் வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
உயர் நீதிமன்ற அனுமதியுடன் வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ராஜகோபால் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப் பட்டார். இந்நிலையில், ராஜ கோபால் 18-ம் தேதி காலையில் மாரடைப்பால் மரணம் அடைந்த தாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ராஜகோபாலின் உடல் ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப் பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டது. ராஜகோபாலின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் புன்னைநகருக்கு நேற்று காலை 8 மணிக்கு கொண்டு வரப் பட்டது. அங்கு அவரது பண்ணை வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக் காக அவரது உடல் வைக்கப் பட்டிருந்தது.
இந்து முன்னணி மாநிலச் செய லாளர் ஜெயகுமார், தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா, ஹோட்டல் உரிமையாளர் சங்க மாநில செயலாளர் சீனிவாசன், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், தெட்சணமாற நாடார் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மாலையில், சந்தனப் பேழையில் ராஜகோபால் உடல் வைக்கப்பட்டு, மலர்களால் அலங் கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றப் பட்டு, இறுதி ஊர்வலம் தொடங்கி யது. அவரது வீட்டுக்கு அருகே உள்ள பண்ணை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது குடும்பத்துக்கு சொந்தமான, புன்னைநகர் வனதிருப்பதி கோயில் நேற்று நடைசாத்தப்பட்டது.