Published : 21 Jul 2019 08:14 AM
Last Updated : 21 Jul 2019 08:14 AM

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்வு: சட்டப்பேரவையில் துணை முதல்வர் அறிவிப்பு

சென்னை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக் கான பண்டிகை முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், ஓய்வூதியர்களுக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாகவும் உயர்த்தப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

சட்டப்பேரவையில், பொதுத் துறை, நிதி மற்றும் வீட்டுவசதித் துறை உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கை விவாதங்க ளுக்கு பதிலளித்து துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் பேசிய தாவது:

கொடிநாள் நிதி வசூலில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இந்த ஆண்டு முதல் கொடிநாள் நிதிக்கு வருமானவரி விலக்கும் பெறப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்த தமிழக தொழிலாளர்கள், மீனவர்கள் உட்பட 221 பேர் மீட்கப் பட்டு தாயகம் அழைத்து வரப் பட்டுள்ளனர்.

முதல்வர் தனிப் பிரிவில் கடந்த 2018-ம் ஆண்டில் பெறப்பட்ட 2 லட்சத்து 8 ஆயிரத்து 216 மனுக்களில், 2 லட்சத்து 5 ஆயிரத்து 949 மனுக்களுக்கும், இணையதளம் மூலம் பெறப்பட்ட 49 ஆயிரத்து 791 மனுக்களில் 49 ஆயிரத்து 169 மனுக்களுக்கும் இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது.

நிதி தேவை அதிகரிப்பு

தமிழக மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளதால், நிதி ஆதாரங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதை மாநில அரசு தன் சொந்த வருவாய் வரவுகளில் இருந்து எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஆனால், இதில், மாநில அரசுக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. ஜிஎஸ்டி வசூலில் தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டாலும், மத்திய அரசிடம் இருந்து ரூ.7 ஆயிரத்து 517 கோடி நிலுவைத் தொகை வரவேண்டியுள்ளது.

இருப்பினும் கடந்த 2016-17-ல் 6.79 சதவீதமாக இருந்த அரசின் வரி வருவாய் வளர்ச்சி, 2017-18-ல் 9.07 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் நிதி பகிர்வால் தமிழகம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆண்டுக்கு ரூ. 3 ஆயிரம் கோடி நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. வட்டித் தொகை கட்டுவதிலும் மானியம் வழங்குவதிலும் கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு சவால்களைச் சந்தித்து வந்தபோதிலும் மாநில அரசு திறம்படவும், சிறப்பாகவும் மக்கள் நலத் திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்தி வருகிறது.

அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங் கப்படும் பண்டிகை முன்பணம் ரூ 5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். இதற் கான உத்தரவு விரைவில் வெளி யிடப்படும். மேலும், 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப்பதி வேடு எளிமையான முறையில் பராமரிக்கப்படுவதோடு சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, மாறுதல் கள், விடுப்பு மேலாண்மை போன்ற விவரங்கள் நிகழ்நேர அடிப்படை யில் உடனுக்குடன் பதியப்படும். ஊதிய முரண்பாடுகளைக் களைய அமைக்கப்பட்ட குழு, அறிக் கையை கடந்த ஜனவரி மாதம் அரசிடம் அளித்துள்ளது.

இவ்வறிக்கை அரசின் விரிவான ஆய்வில் உள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை முன் பணம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

புதிய குடியிருப்புகள்

கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை 14 ஆயிரத்து 63 குடியிருப்புகள், 2016-ல் இருந்து இந்த ஆண்டு மார்ச் வரை, 10 ஆயிரத்து 284 குடியிருப்புகள் என இதுவரை 24 ஆயிரத்து 347 குடியிருப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மனைகள் இந்த ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, சென்னை மற்றும் இதர நகரங்களில் 18,765 குடியிருப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மனை களின் பணிகள், ரூ.3 ஆயிரத்து 100 கோடியே 81 லட்சத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை பீட்டர்ஸ் சாலையில் உள்ள பீட்டர்ஸ் காலனி குடியிருப் பில் வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான 3.84 ஏக்கர் நிலத்தில், உள்ள கட்டிடங்களை இடித்துவிட்டு 8 லட்சத்து 15 ஆயிரம் சதுரஅடியில், ரூ.500 கோடி மதிப்பில் வணிக வளாகம், அலுவலக வளாகம் கட்டப்படும்.

தமிழகம் முழுவதும் திட்ட அனுமதி பெறப்பட்ட தொழிற் சாலை உபயோக மனைப் பிரிவு களில் அமைந்துள்ள மனைகளில், 25 ஆயிரம் சதுரஅடி பரப் பளவு வரை மற்றும் 18.30 மீட்டர் உயரத்துக்கு மிகாத தொழிற் சாலைக் கட்டிடங்கள் கட்ட இணையதளம் மூலமாக திட்ட அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x