திமுக உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி உள்ளாட்சி தனி அதிகாரிகள் பதவி நீட்டிப்பு திருத்த சட்டம் பேரவையில் நிறைவேற்றம்

திமுக உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி உள்ளாட்சி தனி அதிகாரிகள் பதவி நீட்டிப்பு திருத்த சட்டம் பேரவையில் நிறைவேற்றம்
Updated on
1 min read

சென்னை

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளின் பதவி நீட்டிப்புக்கான சட்ட திருத்தம் திமுக உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப் பட்டது.

சட்டப்பேரவைக் கூட்டத் தொட ரில், பல்வேறு சட்ட மசோதாக்கள், சட்ட திருத்த மசோதாக்கள் அறி முகம் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப் பட்டன.

குறிப்பாக, 2019-ம் ஆண்டுக் கான நிதி ஒதுக்கச் சட்ட மசோதாக் கள், தமிழ்நாடு சொத்து உரிமை யாளர்கள் மற்றும் வாடகைதாரர் கள் உரிமைகள் மற்றும் பொறுப் புடமைகள் சட்டத்தில், ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான காலக் கெடுவை நீட்டிப்பது தொடர்பான திருத்தம் ஆகியவற்றை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்தார்.

இந்த சட்ட மசோதாக் கள், திருத்த மசோதாக்கள் ஆய்வு செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டன.

இதையடுத்து, புதியதாக உரு வாக்கப்பட்டுள்ள ஆவடி மாநக ராட்சி தொடர்பான சட்ட மசோதா, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளாட்சி அமைப் புகளின் தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்க ளுக்கு நீட்டிப்பது தொடர்பாக, நகராட்சிகள், ஊராட்சிகள் சட்டங் கள் திருத்த மசோதாக்கள் ஆய்வு செய்யப்பட்டன.

திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு

அப்போது, தனி அதிகாரிகள் பதவிக் காலத்தை நீட்டிப்பது தொடர்பான திருத்த மசோதாக்க ளுக்கு திமுக உறுப்பினர்கள் ரங்கநாதன், ஆஸ்டின் உள்ளிட் டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், எதிர்ப்பையும் மீறி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொண்டுவந்த இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து, அமைச்சர் டி.ஜெயக்குமார் கொண்டுவந்த தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீன்பிடித்தலில் ஈடுபடும் தொழி லாளர்கள் பாதுகாப்புச் சட்டம், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்ட திருத்த மசோதாக்கள், அமைச் சர் சி.வி.சண்முகம் கொண்டுவந்த தமிழ்நாடு நீக்கறவு செய்தல் சட்ட மசோதா, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிமுகம் செய்த தமிழ்நாடு மாட்டின இனப்பெருக்க மசோதா, அமைச்சர் துரைக்கண்ணு கொண்டுவந்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா ஆகியவை ஆய்வு செய்து நிறைவேற்றப்பட்டன.

நிலம் கையகப்படுத்தும் சட்டம்

மேலும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிமுகம் செய்த தமிழ்நாடு அரசு நிலம் கையகப் படுத்துதல் சட்ட மசோதா, படுக்கை வசதி, படுக்கை மற்றும் இருக்கை வசதிகள் கொண்ட ஆம்னி பேருந் துகளுக்கு வரி விதிப்பது தொடர் பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொண்டுவந்த சட்ட திருத்த மசோதா. சிறுபான்மையினர் ஆணைய சட்ட திருத்த மசோதா ஆகியவையும் பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in