Published : 21 Jul 2019 08:05 AM
Last Updated : 21 Jul 2019 08:05 AM

தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம்; நவ.1-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம்: பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்

சென்னை,

கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்களின் குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப் படும். நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணி மண்டபம் கட்டப்படும் என்று பேர வையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இதுதொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் பழனிசாமி, நேற்று பேரவை விதி 110-ன் கீழ் அறிக்கையொன்றை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:

கூட்டுறவு பொதுவிநியோகத் திட்ட நியாய விலைக் கடை பணியா ளர்களுக்கு தற்போது வழங்கப் படும் குடும்ப நல நிதி ரூ.2 லட்சத் தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த் தப்படும். இப்பணியாளர்கள் பணி யில் இருக்கும்போது இறக்க நேரிட் டால், அவர்கள் குடும்பத்தின் உட னடி தேவைகளைப் பூர்த்தி செய்வ தற்கு, குடும்ப நல நிதியில் இருந்து தற்போது வழங்கப்படும் முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.

இந்த நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பணி யாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிப் படி, ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு மாத சம்பளம், அவர்களது வங்கிக் கணக்கில் மின்னணு பணப் பரிவர்த்தனை (இசிஎஸ்) மூலம் வழங்கப்படும்.

3 ஆயிரம் கால்நடைகளுக்கு மேல் உள்ள 75 கிராமங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்களும், 5 ஆயிரம் கால்நடைகளுக்கு மேல் இருக்கும் 25 கிராம பஞ்சாயத்து களில் புதிய கால்நடை மருந்தகங் களும் ஏற்படுத்தப்படும். 5 கால்நடை மருந்தகங்கள் கால்நடை மருத்துவ மனைகளாகவும், 2 கால் நடை மருத் துவமனைகள் மற்றும் பெரு மருத்து வமனைகள் 24 மணி நேரமும் இயங் கும் பன்முக மருத்துவமனைகளா கவும் தரம் உயர்த்தப்படும்.

திரைப்படத் துறையிலும், பாரம் பரிய இசைத் துறையிலும் தியாக ராஜ பாகவதரின் பன்முக பங்களிப் பையும், சாதனையையும் அங்கீக ரிக்கும் வகையிலும், அவரது நினை வைப் போற்றும் வகையிலும் திருச்சி மாவட்டத்தில் ரூ.50 லட்சத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் உருவச் சிலையுடன்கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.

உளுந்தூர்பேட்டை சண்முகம், கவிஞர் நா.காமராசு, முனைவர் இரா.இளவரசு, தமிழறிஞர் அடிகளா சிரியர், புலவர் இறைக்குருவனார், பண்டிதர் ம.கோபாலகிருட்டிணன், பாபநாசம் குறள்பித்தன் ஆகியோ ரின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்படும். இதற்கென ரூ.35 லட்சம் வழங்கப்படும்.

தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1.11.1956-ம் நாளை பெருமைப் படுத்துவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி “தமிழ்நாடு நாள்” என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படும். வாரணாசி இந்து பல்கலைக்கழகம், குவா ஹாட்டி பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தென்னிந்திய மொழிகள் துறை யில் தலா ஒரு தமிழ் உதவிப் பேரா சிரியர் பணியிடம், ரூ.36 லட்சம் தொடர் செலவினத்தில் தோற்றுவிக் கப்படும். இந்திய மொழிகளான அசாமி, சிந்தி ஆகிய மொழிக ளிலும், உலக மொழியான ஈப்ரு மொழியிலும் திருக்குறள் மொழிபெயர்ப்பு இந்த ஆண்டு செய்யப்படும்.

தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பெயரில் தமிழ் ஆய்விருக்கை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறு வப்படும். தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ரூ.20 கோடியில் கட்டு மான வசதிகள், மேம்பாடு, வளர்ச் சிப் பணிகள், புதிய கருவிகள் வாங் குதல், ஏனைய வசதிகள் செய்து தரப்படும். பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்ம ரபினர், சிறுபான்மையின ஏழை மாணவ, மாணவியரின் விடுதிகளில் அவர்களது வருகையைக் கண்கா ணிக்க ரூ.3 கோடியில் பயோ மெட் ரிக் கருவிகள் பொருத்தப்படும்.

மத்திய கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங் களில் படிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் உள்ள பிற் படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத் தப்பட்டோர், சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக மாணவர் ஒருவருக்கு ரூ.2 லட்சம் வரை முதல்கட்டமாக 100 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக ரூ.2 கோடி ஒதுக்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x