Published : 21 Jul 2019 07:49 AM
Last Updated : 21 Jul 2019 07:49 AM

விஐடி சார்பில் மத்திய பட்ஜெட் குறித்த விவாதக் கூட்டம்; அரசியல் நோக்கமற்ற தொலைநோக்கு பட்ஜெட்: பத்திரிகையாளர் குருமூர்த்தி கருத்து

சென்னை

அரசியல், வாக்கு வங்கி நோக்கம் இல்லாமல் தொலைநோக்குப் பார் வையுடன் மத்திய பட்ஜெட் அமைந் திருப்பதாக விஐடி பல்கலைக்கழ கம் சார்பில் நடத்தப்பட்ட பட்ஜெட் விவாதக் கூட்டத்தில் பத்திரிகை யாளர் எஸ்.குருமூர்த்தி தெரிவித் தார்.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2019-20 நிதியாண்டுக்கான பட் ஜெட் குறித்த விவாதக் கூட்டம் விஐடி பல்கலைக்கழகம் சார்பில் சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. அதில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தனது அறிமுக உரையில் கூறிய தாவது: மத்திய பட்ஜெட் குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு தரும் விதமா கவும், அந்த கருத்துகளை மக்கள் தெரிந்துகொள்ளும் விதமாகவும் இந்த விவாதம் 16-வது ஆண்டாக நடத்தப்படுகிறது.

நதிகள் இணைப்பில் கவனம்

நதிகள் இணைப்பில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். கோதாவரியில் இருந்து ஆண்டுக்கு 3 ஆயிரம் டிஎம்சி நீர் கடலுக்கு சென்று வீணாகிறது. அதை காவிரியு டன் இணைத்தால், தென்னிந்தியா வின் குடிநீர் தட்டுப்பாடு, விவசாயி கள் பிரச்சினை தீரும். நாம் பொரு ளாதாரத்தில் மேம்பட, தொழில் துறை உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இறக்குமதியை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பத்திரிகையாளர் எஸ்.குரு மூர்த்தி நெறியாளராக இருந்து விவாதத்தை வழிநடத்தினார். அவர் பேசியதாவது:

அரசியல், வாக்கு வங்கி நோக்கத் தோடு இந்த சாதிக்கு, இந்த சிறுபான்மையினருக்கு இன்ன இன்ன விஷயங்கள் செய்திருக்கி றோம் என்று அறிவிக்காத பட்ஜெட் டாக இந்த ஒரு பட்ஜெட்தான் அமைந்திருக்கிறது.

இந்த துறைக்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு என்ற வழக்கமான பாணியை விடுத்து, இந்த துறை இந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற் பட்டுள்ளது. இன்னும் இந்த அள வுக்கு முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட் டுள்ளது. வெறும் ஒரு நிதியாண்டை மட்டுமே மனதில் கொள்ளாமல், 5 ஆண்டு திட்டமாக தொலைநோக்கு பார்வையுடன் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, விவாதத்தில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன்: வெறும் புள்ளிவிவரங்களை மட்டும் கொண்டு காட்டப்படும் ஜாலங்க ளால் அது சிறந்த பட்ஜெட் ஆகி விடாது. உலக அளவில் பரப்பள விலும், நிலத்திலும் நாம்தான் மிகப்பெரிய விவசாய நாடு. விவசாயிகள் எப்போது மேம்பாடு அடைகிறார்களோ, அதுதான் உண் மையான மேம்பாடு. அந்த வகை யில்தான் பட்ஜெட் இருக்க வேண் டும். ஆனால், உலகமயமாக்கல் கொள்கை அடிப்படையில் இந்திய பட்ஜெட் உருவாக்கப்படுகிறது. அமெரிக்க டாலர்தான் இந்திய பட்ஜெட்டை தீர்மானிக்கிறது.

நிதி குறைப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் கே.பாலகிருஷ் ணன்: மத்திய பட்ஜெட்டை பெண் அமைச்சர் தாக்கல் செய்துள்ள போதிலும், பெண்களுக்கான திட்டங்களுக்கு நிதி குறைக்கப் பட்டுள்ளது.

டாலரில் கடன்

காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்: மாநில அரசுகளுக்கு பங்கு கிடைக்காத வகையில், மத்திய அரசு வரியை உயர்த்தியுள்ளது. வெளிநாடுகளில் இதுவரை ரூபாயில்தான் இந்திய அரசு கடன் வாங்கியுள்ளது. இந்த அரசுதான் முதன்முதலாக டாலரில் வாங்கியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், திமுக எம்.பி. திருச்சி சிவா, அதிமுக எம்எல்ஏ செம்மலை, மதிமுக இளைஞர் அணி செயலர் வி.ஈஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலர் எஸ்.பாலாஜி, தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல் வம் உள்ளிட்டோரும் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x