

தமிழக தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
கூட்டுறவுத்துறை சங்கங் களின் பதிவாளர் பி.சீதாரா மன், மதுவிலக்கு ஆயத் தீர்வை ஆணையராக மாற்றப் பட்டுள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ் குமார், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை செயல் இயக்குநர் எஸ்.சுரேஷ்குமார், கடலூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் மோகன் பியாரே, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், ஏற்கெனவே வகித்து வந்த தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.
தொழில் மேம்பாட்டுக் கழக முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளராகவும், போக்குவரத்துத்துறை ஆணை யர் டி.பிரபாகர ராவ், அதே துறையின் முதன்மைச் செயலாள ராகவும், தோட்டக்கலைத்துறை ஆணையர் சத்தியப்ரத சாகு, போக்குவரத்துத்துறை ஆணையராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவரும், சிறுதொழில் மேம்பாட்டு வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநருமான டி.கார்த்திகேயன், தொல்லியல் துறை ஆணையராகவும், சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான ஆணையராக பிரதீப் யாதவும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் கூடுதல் பதிவாளர் வி.கலையரசி, நில சீர்திருத்த துறை இயக்குநராகவும், சுகா தாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை செயலாளர் டி.ஆபிரகாம், கால்நடைத்துறை இயக்குநராகவும், வணிகவரித் துறை முன்னாள் இணை ஆணையர் ஆர்.லில்லி, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இணை ஆணைய ராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தின் தலைவர் சந்திர பிரகாஷ் சிங், மாநில தொல்பொருள்துறை ஆணையராகவும், மீன்வளத் துறை இயக்குநர் சி.முனிநாதன், கருவூலக் கணக்குத்துறை இயக்குநராகவும், கைத்தறி ஏற்றுமதிக் கழக முன்னாள் செயல் இயக்குநர் பியூலா ராஜேஷ், மீன்வளத்துறை ஆணையராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
கூட்டுறவுத்துறை இணைச் செயலாளர் மணிமேகலை, சமூக பாதுகாப்புத்துறை இயக்கு நராகவும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட ஆணையர் மீனாட்சி ராஜ கோபால், ஊரக வளர்ச்சித்துறை (பயிற்சி) ஆணையராகவும் சுற்றுலா வளர்ச்சித்துறை ஆணையர் ஸ்கந்தன், மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.