

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அத்திவரதர் விழாவில் நீண்ட வரிசையில் நின்று பக்தர் கள் நேற்று வழிபாடு செய்த னர். தொடர்ந்து பல மணி நேரம் வரிசையில் நிற்கும் பக்தர்களில் நலிவுற்றோர் மற்றும் குழந்தை களுக்கு மட்டும் தன்னார்வலர்கள் மூலம் குறிப்பிட்ட அளவில் உணவும் மற்றும் உப்பும் சர்க்கரையும் கலந்த ஓஆர்எஸ் கரைசலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் விழா கடந்த 20 நாட்களாக நடைபெற்று வருகிறது. 20-ம் நாளான நேற்று இளஞ்சிவப்பு பட்டாடை அணிந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று சனிக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக் தர்கள் சுமார் 4 மணி நேரம் வரிசை யில் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு, மேற்கு கோபுரம் வழியாக வெளியேறினர்.
கடந்த நாட்களில் விஐபி தரிசன வாயில் வழியாக நுழைந்து அத்திவரதரை தரிசிக்க, பக்தர்கள் பலர் முயற்சித்ததால் அந்த இடம் எப்போதும் நெரிசலாகவே காணப்பட்டது. தற்போது விஐபி வாயில் வழியாக அனுமதி அட்டை வைத்திருப்பவர்களை மட்டுமே போலீஸார் அனுமதிக்கின்றனர். இதனால் விஐபி நுழைவு வாயிலில் கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே நேற்று விஐபி தரிசன வரிசையில் வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்பட்டது.
உணவு வழங்க ஏற்பாடு
பொது தரிசன வரிசையில் வரும் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க சுமார் 5 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக பலர் சோர் வடைந்து விடுகின்றனர். பசி யோடும் தாகத்தோடும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களில் குழந்தைகள், உடல் நலிவுற்றவர்களும் இருப்பதால், அவர்களுக்கு மட்டும் தன்னார்வலர் கள் மூலம் குறிப்பிட்ட அளவில் உணவும், குடிநீரும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கழிப்பறை வசதியின்மை
கோயிலுக்கு வரும் பக்தர்கள் போதிய கழிப்பறைகள் இல்லா மலும், இருக்கும் கழிவறைகளும் சுத்தமாக இல்லாமலும் அவதியுற்று வருகின்றனர். மேலும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் கழிப்பறை சென்று, மீண்டும் தாங்கள் காத்திருந்த வரிசையிலேயே இணைந்து கொள்ள வசதியாக, கோயிலுக்கு அருகிலேயே தற்காலிக கழிப்பறைகளை கூடுதலாக ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
அதிக அளவில் பக்தர்கள் வரு வதால், அவர்கள் காத்திருக்கும் வரிசை, சாலை வரை நீண்டு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பக்தர்கள் வெயிலிலும் காத்திருக்க வேண்டி யுள்ளது. கோயில் வளாகத்துக் குள்ளேயே நிழற்கூரைகளுடன் கூடிய காத்திருப்பு வரிசையை அமைக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை வைக்கின் றனர்.