‘அன்சருல்லா’ தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் என கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் நடவடிக்கை: சென்னை, மதுரை, திருவாரூர் உட்பட 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள முகமது இப்ராகிம் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள். படம்: எம்.லட்சுமி அருண்
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள முகமது இப்ராகிம் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள். படம்: எம்.லட்சுமி அருண்
Updated on
2 min read

சென்னை

‘அன்சருல்லா’ என்ற தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல் பட்டதாக கைது செய்யப்பட்ட 14 பேரின் வீடுகள் உட்பட தமிழகம் முழுவதும் 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

‘அன்சருல்லா’ என்ற தீவிரவாத அமைப்பை இந்தியாவில் தொடங்கு வதற்காகவும் அதற்கான நிதி ஆதாரங்களை சேர்ப்பதற்காகவும் சிலர் முயற்சி செய்து வருவதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சவுதி அரேபியாவில் பணிபுரியும் இந்தியா வைச் சேர்ந்த 14 நபர்களே தீவிர வாத அமைப்பை தொடங்க முயற்சி செய்வது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசார ணையில், அந்த 14 பேரும் தமிழகத் தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்த தகவல் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி, சென்னை மண்ணடி லிங்கி செட்டி தெருவில் ‘வஹ்தத்தே இஸ் லாமி ஹிந்த்’ என்ற அமைப்பின் அலுவலகம், அதன் நிர்வாகி சையது புகாரியின் வீடு, நாகப்பட்டினத்தில் ஹசன்அலி, முகமது யூசுப்புதீன் ஆகியோரின் வீடுகளில் கடந்த 13-ம் தேதி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் ஹசன் அலி, முகமது யூசுப்புதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக சவுதி அரேபியாவில் பிடிபட்ட நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், ராம நாதபுரத்தைச் சேர்ந்த ரபி அகமது, முன்தாப்சீர், பைசல் ஷெரீப், தேனி யைச் சேர்ந்த முகமது அக்சர், மீரான்கனி, மதுரையைச் சேர்ந்த முகமது ஷேக் மொய்தீன், திரு வாரூரைச் சேர்ந்த முகமது அசா ருதீன், சென்னையைச் சேர்ந்த ராபிக் அகமது, கீழக்கரையைச் சேர்ந்த மொய்தீன் சீனி சாகுல் ஹமீது, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், பெரம்பலூ ரைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத், தஞ்சையைச் சேர்ந்த உமர் பாரூக், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பாரூக் ஆகியோர் கடந்த 14-ம் தேதி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப் பட்டனர்.

டெல்லி விமான நிலையத்தில் 14 பேரையும் கைது செய்த என்ஐஏ அதிகாரிகள் அவர்களை சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறை யில் அடைத்தனர். கைதானவர் களை நேற்று முன்தினம் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, 14 பேரின் வீடுகளிலும் நேற்று என்ஐஏ அதி காரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

நெல்லை மாவட்டம் மேலப் பாளையத்தில் உள்ள முகமது இப் ராஹிம் வீட்டில் நேற்று காலையில் என்ஐஏ அதிகாரி எபிசன்டெங்கோ தலைமையில் 4 பேர் சோதனை நடத்தினர். அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர், அடுத்த தெருவில் உள்ள முகமது இப்ராஹிம் மனைவியின் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக் குடிக்காட்டைச் சேர்ந்த குலாம்நபி ஆசாத் (35) வீட்டில் என்ஐஏ டிஎஸ்பிக் கள் ராஜேஷ், அசோகன் ஆகி யோர் தலைமையிலான அதிகாரி கள் நேற்று சோதனையில் ஈடுபட் டனர். நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த முகம் மது இப்ராஹிம் வீட்டிலும் நேற்று சோதனை நடந்தது. அந்த வீடு கடந்த 15 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்ததால், எந்த ஆவணமும் சிக்கவில்லை. திருவாரூர் மாவட் டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த அகமது அசாருதீன் வீடு பூட்டப் பட்டிருந்ததால் உறவினர்கள் முன்னிலையில் அதிகாரிகள் பூட்டை உடைத்து 4 மணி நேரத் துக்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். இதில், ஐ-போன், சிம்கார்டு, 5 சிடிக்கள் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றை கைப்பற்றினர்.

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் பெரியார் நகரைச் சேர்ந்த உமர் பாரூக் (48) வீடு, கீழக்கரையைச் சேர்ந்த ரபி அகமது, முன்தாப்சீர், ஹமீது பைசல் ஷெரீப், மொய்தீன் சீனி சாகுல் ஹமீது என்ற சாகிபு, வாலி நோக்கத்தைச் சேர்ந்த பாரூக் ஆகிய 5 பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். திருச்சி பாலக்கரை கூனிபஜார் கண்டித்தெருவில் உள்ள உமர் பாரூக்கின் சகோதரி வீட்டிலும் என்ஐஏ குழுவினர் நேற்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை சோதனை மேற்கொண்டனர்.

சென்னை பாரிமுனையில் அக மதுவின் வீட்டில் என்ஐஏ அதிகாரி செந்தில்குமார் தலைமையில் 6 அதிகாரிகள் நேற்று காலை 5 மணி முதல் மதியம் வரை சோதனை நடத்தி, ஏராளமான ஆவணங்களை எடுத்துச் சென்றனர். மதுரை நரி மேட்டில் உள்ள முகமது ஷேக் மைதீன் வீட்டில் நேற்று காலை 6.10 மணி அளவில் இருந்து சோதனை நடந்தது. அங்கிருந்த முகமது ஷேக் மைதீனின் தாயார் மூமினா (72)விடம் விசாரித்தனர். மதுரை வடக்கு துணை வட்டாட்சியர் முத்து விஜயகுமார், மதுரை கிழக்கு வட்டாட்சியர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் உள்ளூர் போலீஸார் முன்னிலையில் இந்த சோதனை நடந்தது.

தேனி மாவட்டம் கோம்பையில் மீரான்கனி (38), முகமதுஅப்சல் (28) ஆகியோரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டன. என்ஐஏ டிஸ்பி சீனி வாசராவ், ஆய்வாளர் பாரதிராஜா தலைமையிலான குழு சோதனை செய்தது. இதில் லேப்டாப் மற் றும் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். 14 பேரின் வீடு கள், சிலரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 22 இடங்களில் சோதனை நடந்தது.

சோதனையில் ஏராளமான ஆவ ணங்களை அதிகாரிகள் கைப்பற்றி யுள்ளனர். கைப்பற்றப்பட்ட பென் டிரைவ், மெமரி, சிம் கார்டுகள், செல்போன்கள், லேப்டாப்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in