

சென்னையில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிறுவனம், தொழிலாளர் நிர்வாகம் தொடர்பான ஓராண்டு கால முதுகலை பட்டயப் படிப்பையும் (மாலை நேரம்), தொழிலாளர் சட்டம் மற்றும் நிர்வாக சட்டம் தொடர்பான ஓராண்டு கால பட்டயப் படிப்பையும் (வாராந்திரம்) நடத்தி வருகிறது.
மாணவர்கள் மற்றும் பெற்றோ ரின் வேண்டுகோளை தொடர்ந்து, மாலைநேர முதுகலை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 15-ம் தேதி வரையும், அதேபோல், வாராந்திர பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிப் பதற்கான கடைசி நாள் ஜூலை 31-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப் படுகிறது. விண்ணப்பத்தின் விலை ரூ.200. எஸ்சி, எஸ்டி வகுப்பின ருக்கு ரூ.100 மட்டும். (சாதி சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும்). கூடுதல் விவரங்களுக்கு தமிழ் நாடு தொழிலாளர் கல்வி நிறுவன அலுவலகத்தை 044-28440102, 28445778 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
மாலை நேர படிப்புக்கான வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வாராந்திர படிப்புக்கான வகுப்புகள் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகாலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறும் என்று இணை இயக்குநர் (தொழிலாளர்) டி.குமரன் தெரிவித்தார்.
மேற்கண்ட தொழிலாளர் நல சட்டம் தொடர்பான பட்டய, முதுகலை பட்டய படிப்புகளை முடிப்பவர்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தொழிலாளர் அதிகாரி தேர்வையும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (பிஎப்) உதவி ஆணையர் தேர்வு மற்றும் தொழிலாளர் நல அதிகாரி தேர்வு, ரயில்வே தேர்வு வாரியத்தின் தொழிலாளர் நல அதிகாரி தேர்வு ஆகியவற்றை எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.