Published : 20 Jul 2019 08:18 AM
Last Updated : 20 Jul 2019 08:18 AM

‘திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’; திருட்டு சம்பவங்களை குறைக்க நடவடிக்கை- முதல்வர் பழனிசாமி விளக்கம்

சென்னை

‘திருடராய்ப் பார்த்து திருந்தா விட் டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்று எம்ஜிஆர் பாடல் வரிகளை குறிப்பிட்டு சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, திருட்டு சம்பவங்களை குறைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் காவல் துறை மானிய கோரிக்கையில் நேற்று நடந்த விவாதம்:

சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.ஆர்.ராமசாமி: தூத்துக்குடியில் ஆணவக்கொலை நடந்துள்ளது. தாம்பரத்தில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்று பல கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.

முதல்வர் பழனிசாமி: இந்த குற்ற சம்பவங்கள் தமிழகத்தில் மட்டுமோ, இந்தியாவில் மட்டுமோ அல்ல, உலக அளவில் நடந்து வரு கின்றன. காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளி களுக்கு தண்டனை வாங்கித் தரு கின்றனர். குற்றங்களைக் குறைத்து வருகிறோம். முன்விரோதம், பல் வேறு பிரச்சினைகள் காரணமாக இந்தக் கொலைகள் நடந்து வரு கின்றன.

கே.ஆர்.ராமசாமி: பூட்டிய வீடு களை உடைத்து திருடி வருகின் றனர். மோட்டார் சைக்கிளில் செல் பவர்கள் சாலையில் நடந்து செல் லும் பெண்களின் செயின்களை பட்டப்பகலில் பறித்துச் செல்கின்ற னர். அவர்கள் சாலையில் இழுத் தும் செல்லப்படுகின்றனர்.

முதல்வர் பழனிசாமி: செயின் பறிப்பைத் தடுக்க காவல் துறை யினர் சார்பில் சென்னையில் மட்டும் 2.5 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. காவல் துறையினர் சிறப்பாகப் பணி யாற்றி வருகின்றனர். இருப்பினும், சில சம்பவங்கள் நடக்கும்போது அவற்றை குறைக்க காவல்துறை யினர் நடவடிக்கை எடுக்கின்றனர்.

‘திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது…’ என்று 58 ஆண்டு களுக்கு முன்னரே திரைப்படத்தில் எம்ஜிஆர் பாடியுள்ளார்.

எனவே, திருட்டு சம்பவங் களை ஒழிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x