

சென்னை
சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே தண்டவாளப் பராமரிப்பு பணி நாளை (ஞாயிறு) முதல் அடுத்தடுத்த 6 ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கவுள்ளதால் அன்றைய தினங்களில் இந்த தடத்தில் 29 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை எழும்பூர் - தாம் பரம் இடையே, வரும் 21, 28, ஆகஸ்ட் 4, 11, 18, 25-ம் தேதி களில் (ஞாயிறுக்கிழமை களில்) தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், சென்னை கடற் கரையில் இருந்து தாம்பரத் துக்கு காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40, மதியம் 12.00, 12.10, 12.20, 12.40, 1.15, 1.30, 2.00, 2.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
இதேபோல், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற் கரைக்கு காலை 10.45, 10.55, 11.15, 11.25, 11.35, மதியம் 12.00, 12.15, 12.45, 1.30, 1.45, 2.15, 2.30, மாலை 3.00, 3.10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்களின் சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன.
பகுதி சேவை ரத்து
சென்னை கடற்கரை - செங் கல்பட்டுக்கு காலை 11, 11.50, மதியம் 12.30, 1, 1.45, 2.15, 2.45 மற்றும் அரக்கோணத்துக்கு மதியம் 12.50 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து இயக்கப் படும். காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை காலை 9.15, செங்கல் பட்டு - கடற்கரை காலை 10.55, காலை 11.30, மதியம் 12.20, 1, 1.50, திருமால்பூர் - கடற்கரைக்கு காலை 10.40 மணி ரயில்கள் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
பயணிகள் சிறப்பு ரயில்
இதற்கிடையே, பயணிகள் வசதிக்காக சென்னை கடற் கரை - தாம்பரம் இடையே இருமார்க்கத்திலும் பயணிகள் சிறப்பு ரயில்களாக 8 ரயில்கள் இயக்கப்படஉள்ளன. 30 நிமி டங்கள் முதல் 45 நிமிடங்கள் இடைவெளியில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
திருத்தணிக்கு சிறப்பு ரயில்
ஆடி கிருத்திகையை முன் னிட்டு பயணிகள் வசதிக் காக சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு வரும் 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்ட்ரலில் இருந்து காலை 8.20, 11.05 மதியம் 12.50 மணிக்கு புறப்படும் அரக்கோணம் மின் சார ரயில்கள் திருத்தணி வரையில் நீட்டிப்பு செய்து சிறப்பு ரயில்களாக இயக்கப் படும். திருத்தணியில் இருந்து காலை 11.30, மதியம் 1.30, மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் களாக இயக்கப்படும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.