

சென்னை
சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள், செவிலியர் மாணவிகள் மீது தாக்குதல் நடத் தினர். அவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவமனை களில் செவிலியர் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை யைச் சேர்ந்தவர் அந்தோணி அம்மாள்(67). காய்ச்சல் காரண மாக கடந்த 8-ம் தேதி திருவல்லிக் கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி டாக்டர்களின் அறிவுரையின்படி செவிலியர் மாணவிகள் வழக்கமாக செலுத்தும் மருந்தை ஊசி மூலம் மூதாட்டிக்கு செலுத்தினர். மருந்து செலுத்தப்பட்ட சிறிது நேரத்தில் மூதாட்டி உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த மூதாட்டியின் உற வினர்கள் செவிலியர் மாணவிகள் 5 பேரை விரட்டி விரட்டி அடித்தனர்.
தவறான மருந்து செலுத்தியதால் தான் மூதாட்டி உயிரிழந்ததாகக் கூறி, உறவினர்கள் மருத்துவ மனையில் முற்றுகை போராட்டத் தில் ஈடுபட்டனர். மருந்து செலுத்திய தால் மூதாட்டி உயிரிழக்கவில்லை. அவரின் இதயம் திடீரென்று செயலிழந்ததே உயிரிழப்புக்குக் காரணம் என்று மருத்துவமனை நிர்வாகம் அவர்களிடம் விளக் கியது.
இந்நிலையில் செவிலியர் மாணவிகள் மீது தாக்குதல் நடத்தி யதைக் கண்டித்தும், அவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவ மனை, சென்னை அரசு பொது மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் நேற்று 1,500-க்கும் மேற்பட்ட செவிலியர் மாணவிகள் உள்ளிருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, போராட்டத்தை கைவிடும்படி அவர்களிடம் மருத்துவமனைகளின் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. செவிலி யர் மாணவிகளின் உள்ளிருப்பு போராட்டத்தால் அரசு மருத்துவ மனைகளில் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.
இதுதொடர்பாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர் மாணவிகளிடம் கேட்ட போது, “நோயாளிகளுக்கு சிகிச்சை யளிக்கும் டாக்டர்கள், என்ன மருந்து, மாத்திரை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டுச் செல்வார். அதன்படி, நாங்கள் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளைக் கொடுப்போம். உயிரிழந்த மூதாட்டிக்கும், டாக்டர் கள் சொன்ன மருந்தைத்தான் 10 நாட்களாகக் கொடுத்து வந்தோம். மூதாட்டி உயிரிழந்த அன்றும் அதே மருந்துதான் கொடுக்கப்பட்டது. ஆனால், தவறான மருந்து கொடுக் கப்பட்டதால் மூதாட்டி உயிரிழந்து விட்டதாகக் கூறி, அவரின் உறவினர்கள் மருத்துவமனையில் எங்களை ஓட ஓட விரட்டி அடித்த னர். எங்களுக்கு நீதி வேண்டும். பாதுகாப்பு வேண்டும். எங்களை அடித்தவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.