உடல்நலம் குன்றியோர், கர்ப்பிணிகள் அத்திவரதர் தரிசனத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும்: காஞ்சி ஆட்சியர் வேண்டுகோள்

அத்திவரதரை தரிசிக்க நீண்ட வரிசையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பக்தர்கள். படங்கள்: எம்.முத்துகணேஷ்
அத்திவரதரை தரிசிக்க நீண்ட வரிசையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பக்தர்கள். படங்கள்: எம்.முத்துகணேஷ்
Updated on
1 min read

காஞ்சிபுரம்

அத்திவரதர் வைபவத்தின் 19-வது நாளான நேற்று நீல நிறப் பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வைபவம் நடைபெறு வதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந் தும் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வந்து செல்கின்றனர். எதிர்பார்த்ததை விட பல மடங்கு கூட்டம் வருவதால் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெருமாளுக்கு உகந்த திருவோண நட்சத்திரம் என்பதால் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பெருமாளை தரிசிக்கக் கூடினர். இதனால் ஏற் பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந் தனர். இதையடுத்து நெரிசலை தடுக்க மூலவர் தரிசனம் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்திவரதரை தரிசிப்பதற்கு 4 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. எனவே உடல் தளர்ந்த முதியோர்கள், உடல்நலம் குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகளுடன் வருவோர் அத்தி வரதர் தரிசனத்தை தவிர்ப்பது நல்லது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆன்-லைன் மூலம் ரூ.300 கட்டணத்தில் பதிவு செய்து, அத்திவரதரை தரிசிக்க விரும்புபவர்கள் மாலை 6 மணியில் இருந்து 10 மணிவரை தரிசிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in