உள்ளாட்சிகளின் தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

உள்ளாட்சிகளின் தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
Updated on
2 min read

சென்னை

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கச் செய்யும் 2 சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் உள் ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிமுகம் செய்த சட்ட மசோதாவில் கூறப் பட்டிருப்பதாவது:

உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்கா ததால் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அவ்வாறு நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களின் பதவிக்காலம் ஜூன் 30-ம் தேதி முடிவடைந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி அமைப்புகளின் தொகுதி எல்லை கள் மறுவரையறை செய்யப்பட்டு, கடந்த 2018 டிசம்பர் 14-ம் தேதி அந்தந்த மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பெண்கள் (பொது மற்றும் எஸ்சி, எஸ்டி) ஆகியோருக்கான இட ஒதுக்கீடு 2019 மே 20, 21 தேதிகளில் தமிழக மற்றும் மாவட் டங்களின் அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளது.

சட்டப்பேரவை தொகுதி வாரி யாக தேர்தல் ஆணையத்தால் தயா ரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை, உள்ளாட்சி வார்டு வாரியாக மாற்றி அதன்படி, வாக்குச்சாவடிகளை அடையாளம் காணும் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அண்மையில்தான் வாக்காளர் பட்டியலின் நகல் பெறப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு 95 நாட்கள் தேவை என தேசிய தகவல் மையம் கோரியுள்ளது.

எனவே, உள்ளாட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் முன்பு தேர்தல் தேதியை அறிவிக்க இயலாது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதை சட்டமாக்க ஏதுவாக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப் படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது. இந்த இரு சட்ட மசோதாக் களையும் அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக திமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

சென்னையை அடுத்துள்ள ஆவடி சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி கடந்த மார்ச் 9-ம் தேதி ஆளுநரால் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அது, கடந்த ஜூன் 17-ம் தேதி தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. இதை சட்டமாக்க வகை செய்யும் 2019 ஆவடி மாநகராட்சி சட்ட மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் பேரவையில் நேற்று அறிமுகம் செய்தார்.

தடை நீக்கம்

தமிழகத்தின் மக்கள் தொகை யில் மாற்றுத்திறனாளிகள் 3 சத வீதம் உள்ளனர். அவர்களில் பெரும் பான்மையோர் உயர் கல்வியும், தகவல் தொடர்புத் திறமையும் பெற்றுள்ளனர். எனவே, உள்ளாட் சித் தேர்தலில் காது கேளாதோர், தொழுநோயாளிகள் போட்டியிட இருந்த தடையை நீக்க வகை செய்யும் சட்ட மசோதாவையும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று அறிமுகம் செய்தார்.

ஆதிதிராவிடர் நலத் திட்டங் களுக்காகவும், தொழில் நோக்கங் களுக்காகவும் நிலங்களை கையகப் படுத்த 3 சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேரவையில் நேற்று அறிமுகம் செய்தார்.

இந்த சட்ட மசோதாக்கள் அனைத்தும் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பின்னர் நிறைவேற்றப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in