Published : 19 Jul 2019 06:06 PM
Last Updated : 19 Jul 2019 06:06 PM

வேலை வேண்டுமா?- ரூ.32 ஆயிரம் சம்பளத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பணி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான Indian Oil Corportation Ltd.-ல் டிப்ளமோ இன்ஜினீயர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், தகுதியானவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

1. வேலையின் பெயர்: Junior Engineering Assistant (Production)
கல்வித்தகுதி:  Chemical/Refinery & PetroChemical Engineering பாடப்பிரிவில் தேர்ச்சி அல்லது கணிதம்/இயற்பியல்/வேதியியல் பாடப்பிரிவில் பி.எஸ்சி பட்டம் + ஓராண்டு அனுபவம்
காலியிடங்கள்: 74

2. வேலையின் பெயர்: Junior Engineering Assistant (P& U)
கல்வித்தகுதி:  Mechanical / Electrical Engineering பாடப்பிரிவில் தேர்ச்சி  + ஓராண்டு அனுபவம். அல்லது பிட்டர் டிரேடில் ITI தேர்ச்சி அல்லது பி.எஸ்சி (PCM) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 26

3.வேலையின் பெயர்: Junior Engineering Assistant (Mechanical/ Electrical) 
கல்வித்தகுதி:  சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி+ ஓராண்டு பணி அனுபவம்.
காலியிடங்கள்: 20

இது தவிர Junior Engineering Assistant (Instrumentation), Junior Quality Analyst மற்றும் Junior Engineering Assistant ஆகிய பணிகளுக்கும் காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து மேலும் விரிவாக அறிந்துகொள்ள: https://www.iocl.com/PeopleCareers/job.aspx

வயது வரம்பு: 30.06.2019-ல் 18 முதல் 26 வயதுக்குள் இருக்கவேண்டும்
சம்பளம்: ரூ11,900 -  ரூ.32,000

தேர்வு முறை:
1. எழுத்துத் தேர்வு 
2. Skill/ Proficiency/Physical Test

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 04.08.19.

எப்படி விண்ணப்பிப்பது?
ஆன்லைன் மூலம் https://www.iocrefrecruit.in/iocrefrecruit/index.aspx என்ற இணைய முகவரியைக் க்ளிக் செய்து அதில் கூறப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. ஆன்லைன் மூலமாக மட்டுமே பணத்தைச் செலுத்தமுடியும்.
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.07.2019

கூடுதல் விவரங்களுக்கு: https://www.iocl.com/PeopleCareers/job.aspx

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x