

சென்னை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில், இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கோவை மாவட்டம் சின்னகல்லாறில் அதிகபட்சமாக 10.செ.மீ. மழையும், கடலூரில் 9 செ.மீ. மழையும், அரியலூர் மற்றும் புதுக்கோட்டையில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்"
இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.