வேலூர் மக்களவை இடைத்தேர்தல்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

வேலூர் மக்களவை இடைத்தேர்தல்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
Updated on
1 min read

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைவரின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடந்த நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மட்டும் நிறுத்தப்பட்டது. வேலூர் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், வீடு மற்றும் திமுக பிரமுகர்களின் வீடுகளில் மார்ச் 29-ம் தேதி நள்ளிரவு தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி வரை வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.11.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனை தொடர்பாக வருமான வரித்துறையினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன், இவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் ரத்துச் செய்யப்பட்ட தேர்தலை வரும் ஆகஸ்ட் 5 -ம் தேதி அன்று நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜூலை 18-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள். இன்று வேட்புமனு பரிசீலனை, வரும் 22-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள். ஆகஸ்டு.5 தேர்தல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்கிற நிலையில் பிரச்சார வியூகத்தை திமுக அதிமுக இரண்டுக்கட்சிகளும் வேக வேகமாக செய்து வருகின்றன.

இந்நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனையின்போது கதிர் ஆனந்த் வேட்புமனுவை ஏற்க சுயேட்சை வேட்பாளர் எதிர்ப்புத்தெரிவித்ததால் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனையும் நிறுத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் வேட்புமனுக்களை ஏற்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்ததால் பிரச்சினை தீர்ந்தது. இதனால் திமுக அறிவித்திருந்த மாற்று வேட்பாளர் வாபஸ் பெறுவார் என தெரிகிறது. சிக்கல் தீர்ந்ததால் திமுக, அதிமுகவினர் நிம்மதி அடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in