ஆசிரியர்கள் வருகைப்பதிவு பயோமெட்ரிக் இயந்திரத்தில் இந்தி திணிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கண்டனம்

ஆசிரியர்கள் வருகைப்பதிவு பயோமெட்ரிக் இயந்திரத்தில் இந்தி திணிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கண்டனம்
Updated on
1 min read

ஆசிரியர்கள் வருகைப்பதிவு பயோமெட்ரிக் இயந்திரத்தில் வேண்டுமென்றே இந்தி திணிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகைப் பதிவினை பயோ மெட்ரிக் மூலம் பதிவு செய்ய தமிழக அரசு சார்பில் பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்துள்ளது. இதற்காக இயந்திரங்கள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. தற்போது சில பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு இயந்திரத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பதிவுகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பயோ மெட்ரிக் இயந்திரம் சோதனைக்கு உட்டபடுத்தப்பட்டுத்தான் பொறுத்தப்பட்டதா இல்லை இந்தி மொழியைத் திட்டமிட்டு பள்ளிகளில் திணிக்கும் முயற்சியா என்று சந்தேகம் ஏற்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் தமிழ் அழிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

குறிப்பாக பள்ளிகளில் இந்தி புகுத்தப்படுவது கண்டனத்திற்குரியது. தமிழ்மொழிதான் நமது முதன்மையான மொழி. தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழுக்கு இழுக்கு ஏற்படாமல், தமிழக பள்ளிக் கல்வித்துறை உடனடி நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்''. 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in