Published : 19 Jul 2019 09:07 AM
Last Updated : 19 Jul 2019 09:07 AM

புதிதாக தென்காசி மாவட்டம் உதயம்; 34 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

அ. அருள்தாசன்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி அறிவி்த் துள்ளது இப்பகுதி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் 34 ஆண்டுகளாக எழுப்பப் பட்ட கோரிக்கை தற்போது நிறை வேறியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, தென்காசி, சேரன்மகாதேவி ஆகிய 3 வருவாய் கோட்டங்கள், 16 வருவாய் வட்டங்கள், திருநெல்வேலி மாநக ராட்சி, 6 நகராட்சிகள், 36 பேரூ ராட்சிகள், 19 ஊராட்சி ஒன்றியங் கள், 425 கிராம ஊராட்சிகளை கொண்டு பரந்து விரிந்துள்ளது. இம்மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று இப்பகுதி மக்களும் பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினரும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இங்குள்ள தென்காசி மக்களவை தொகுதி, சட்டப் பேரவை தொகுதிகளில் போட்டி யிடுவோரும் தேர்தல் காலங்களில் பொதுமக்களுக்கு அளிக்கும் முக்கிய வாக்குறுதியாக தென்காசி தனி மாவட்டம் வாக்குறுதி இருந்து வந்தது. தமிழக சட்டப் பேரவையில் இது தொடர்பாக அதிமுக, திமுக ஆட்சிக் காலங்களில் பல உறுப்பினர்கள் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு, இது குறித்து ஆராயப்படும் என்ற பதிலையே அமைச்சர்கள் தெரிவித்து வந்தனர்.

ஆட்சியர் அறிக்கை

கடந்த சில மாதங்களுக்குமுன் விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தபோது, தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து, அது குறித்த அறிக்கையை விரைவில் அனுப்பி வைக்குமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் தென்காசியில் நடைபெற்ற கட்சி விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, சட்டப் பேரவை உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எழுப் பிய கோரிக்கையான தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக் கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, தமிழக சட்டப் பேரவையில் தென்காசி தனி மாவட்டம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்த கோரிக்கையை பல ஆண்டுகளாக எழுப்பி வந்த வாஞ்சி இயக்க நிறுவனர் ராமநாதன் கூறியதாவது:

1985-ம் ஆண்டிலிருந்தே இந்த கோரிக்கையை நாங்கள் எழுப்பி வருகிறோம். தற்போது அது நிறைவேறியிருப்பது இப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகிரி, புளியங்குடி, வாசுதேவநல்லூர் போன்ற வெகுதூர பகுதிகளில் இருந்து திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களுக்கு மக்கள் அலைவது தடுக்கப்படும். தென்காசி மாவட்டம் உருவாக்கப்படுவதால் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு நன்மைகளும் ஏற்படும் என்றார்.

தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதையடுத்து புளியங்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x