அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: காஞ்சியில் நெரிசலில் சிக்கி 4 பேர் பரிதாப உயிரிழப்பு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு முதியோர்கள் செல்லும் வரிசை அருகே குவிந்திருந்த பக்தர்கள் கூட்டம்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு முதியோர்கள் செல்லும் வரிசை அருகே குவிந்திருந்த பக்தர்கள் கூட்டம்.
Updated on
2 min read

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் நேற்று உயிரிழந்தனர். மேலும் சிலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவ முகாம் களிலும், மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் உள்ள வரத ராஜ பெருமாள் கோயிலில் அத்தி வரதர் உற்சவம் நடைபெற்று வருகி றது. அக்கோயிலில் உள்ள அனந் தசரஸ் குளத்தில் மூழ்கிய நிலையில் இருந்த அத்திவரதரை 40 ஆண்டு களுக்குப் பிறகு எடுத்து பக்தர்கள் தரிசனத்துக்கு வைத்துள்ளனர். அத்திவரதரை தரிசிக்க தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர் கள் வந்தவண்ணம் உள்ளனர்.

கடந்த 18 நாட்களில் சுமார் 20 லட்சம் பேர் அத்திவரதரை வழிபட்டு உள்ள நிலையில், நேற்று முன்தினம் சந்திர கிரகணம் என்பதால் வரத ராஜர் கோயில் நடை சாற்றப்படலாம் என்ற சந்தேகத்தில் பக்தர்கள் அவ் வளவாக வரவில்லை. ஆனாலும் தரிசனம் வழக்கம்போல் நடைபெற் றது. இதையடுத்து நேற்று பல்வேறு இடங்களில் இருந்து அதிகாலை 3 மணி முதலே பக்தர்கள் குவியத் தொடங்கிவிட்டனர்.

நேரம் செல்லச் செல்ல பக்தர்க ளின் வருகை தொடர்ந்து அதிகரித்த படியே இருந்தது. நேற்று ஒரே நாளில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிக மான பக்தர்கள் கோயிலுக்குள் குவிந்தனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களும் ஒரே நேரத்தில் வரிசையில் நுழைய முயன்றதா லும், ஒருவருக்கு ஒருவர் முந்திச் செல்ல முயன்றதாலும் பல்வேறு இடங்களில் நெரிசல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்தக் கூட்ட நெரிசலில் சென்னை திருவல்லிக்கேனி பகுதி யைச் சேர்ந்த பழ வியாபாரி நட ராஜன்(61), ஆவடி பகுதியைச் சேர்ந்த சாந்தி என்கிற நாராயணி(60), ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த கங்கா லட்சுமி(60), சேலம் மாவட்டம் அயோத்திபட்டனம் பகுதி யில் மருந்துக் கடை நடத்தி வரும் ஆனந்தவேல்(47) ஆகிய 4 பேர் உட்பட சுமார் 20 பேர் நெரிசலில் சிக்கி உடல்நலம் பாதிக்கப்பட்ட னர். இவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் சாந்தி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். நடராஜன், கங்கா லட்சுமி இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஆனந்த வேல் செங்கல்பட்டு அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு, அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்றவர் கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர்.

உயிரிழந்தவர்களில் 3 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர் கள் கூட்ட நெரிசலில் நீண்ட நேரம் வரிசையில் நின்றதால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், மயங்கி விழுந்ததாகவும் மருத்துவக் குழு வைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்திலிடம் கேட்டபோது, மொத்தம் 6 பேர்தான் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் இறந்துவிட்டனர். மற்றவர்கள் பயத்தின் காரணமாக மருத்துவ முகாமுக்கு வந்தனர். அவர்களுக்கு புறநோயாளி அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார்.

4 பேர் இறப்பு குறித்து பக்தர்கள் சிலர் கூறும்போது, தினந்தோறும் ஒரு லட்சம் பேர் வருவார்கள் என்று திட்டமிட்டு மாவட்ட நிர்வாகம் அதற் கேற்ற வகையில் மட்டுமே ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் சில நாட்க ளில் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். வசந்த மண்டபம் குறுகிய பகுதியாக இருப்பதால்தான் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. எனவே அத்திவரதர் தரிசனத்தை வசந்த மண்டபத்தில் இருந்து இடமாற்றம் செய்வது குறித்து உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்றனர்.

முதல்வர் நிவாரணம்

இந்நிலையில், நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித் துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in