

வேலூர்
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேலூர் மக்களவைத் தேர்தல் வரும் ஆக.5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11-ம் தேதி தொடங்கி யது. இன்று (18-ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 19-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலினை நடக்கிறது. 22-ம் தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெறலாம். அன்று மாலை இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதிமுக, நாம் தமிழர் கட்சி உள் ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியி னர் மற்றும் சுயேச்சை வேட்பாளர் கள் என 21 பேர் வேட்புமனு தாக் கல் செய்தனர். இந்நிலையில், திமுக சார்பில் வேலூர் மக்க ளவைத் தேர்தலில் போட்டியிட உள்ள கதிர்ஆனந்த் நேற்று தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சிய ரும், தேர்தல் நடத்தும் அலுவலரு மான சண்முகசுந்தரத்திடம் தாக் கல் செய்தார்.
அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி முன்னாள் எம்பி பேராசிரியர் காதர் மொய்தீன், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் மீது வருமான வரித் துறை வழக்கு பதிவு செய்துள்ளதால் அவரது வேட்புமனு ஏற்கப்படுமா? என்ற பேச்சு நிலவுகிறது. இந்நிலையில், கதிர்ஆனந்த்தின் மனைவி சங்கீதா மாற்று வேட்பாளராக நேற்று மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப் போது, திமுக பொருளாளர் துரை முருகன், ராணிப்பேட்டை சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.காந்தி மற்றும் கூட்டணி கட்சியினர் உடனி ருந்தனர். நேற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உட்பட 9 பேர், 10 மனுக்களை தாக்கல் செய்துள்ள னர். கடந்த 11-ம் தேதி முதல் நேற்று வரை மொத்தமாக 30 பேர், 33 மனுக் களை தாக்கல் செய்துள்ளனர்.