Published : 18 Jul 2019 07:53 AM
Last Updated : 18 Jul 2019 07:53 AM

நீட் குறித்து விவாதிக்க சிறப்புக் கூட்டத்தை கூட்ட முதல்வர் தயார்; நீட் மசோதாக்களை நிராகரித்த காரணத்தை மத்திய அரசு தெரிவிக்காவிட்டால் வழக்கு: பேரவையில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு

சென்னை

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான கார ணத்தை மத்திய அரசு தெரிவிக்கா விட்டால் தமிழக அரசின் சார்பில் வழக்கு தொடரப்படும் என்று சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குகோரி சட்டப் பேரவையில் 1-2-2017-ல் 2 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, 18-2-2017 அன்று குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனாலும் ஒப்புதல் கிடைக்க வில்லை. இதுகுறித்து சட்டப்பேர வையில் திமுக சார் பில் கேள்வி எழுப்பியபோது, “நீட் மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளதாக (With held) குடியரசுத் தலைவரிடம் இருந்து 22-9-2017-ல் கடிதம் வந்ததாகவும் எதற்காக நிறுத்தி வைக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை கேட்டு தமிழக அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டதாகவும்" சட்ட அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால், Withheld என்றாலே நிராகரிக்கப்பட்டது என்றுதான் பொருள். தமிழக சட்டப்பேரவை யில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைச் செய லாளர் சென்னை உயர் நீதிமன் றத்தில் நேற்று (ஜூலை 16) அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அரசியல் சட்டப்படி குடியரசுத் தலைவர் ஒரு மசோதாவை நிராகரித்தால் 6 மாதங்களுக்குள் அதனை திருப்பி அனுப்பலாம். தற்போது சுமார் 2 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அந்த வாய்ப்பு இல்லை. எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி புதிதாக 2 மசோதாக்களை நிறைவேற்றி அனுப்ப வேண்டும். அதற்கு அரசு தயாரா?

சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்திருப்பதாக 22-9-2017-ல் மத்திய அரசு கடிதம் அனுப்பியது. அதற்கான காரணங்கள் தெரிந்தால்தான் அதனை சரிசெய்து மீண்டும் சட்ட மசோதாக்களை அனுப்பமுடியும். அப்படியே அனுப்பினால் மீண்டும் அதே பதில்தான் வரும்.

எனவேதான், எதற்காக மசோ தாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன என்பதற்கு விளக்கம் கேட்டு தமிழக அரசின் சார்பில் 25-10-2017 முதல் கடந்த 5-ம் தேதி வரை 12 கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஆனால், இதுவரை மத்திய அரசிட மிருந்து பதில் வரவில்லை. தமிழகத் துக்கு நீட்தேர்வு வேண்டாம் என்ப தில் அதிமுக, திமுகவின் நிலைப் பாடு ஒன்றுதான். எனவே, கடைசி யாக மீண்டும் ஒருமுறை நிராகரிப் புக்கான காரணங்களைக் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுது வோம். அதற்கும் பதில் வராவிட் டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

மு.க.ஸ்டாலின்: நீட் தேர்வு என்பது தமிழக மாணவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட தற்கான காரணங்களைக் கேட்டு 12 முறை கடிதம் எழுதியதாக அமைச் சர் கூறுகிறார். இந்த 2 ஆண்டுகளில் மசோதாவை சட்டமாக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருந்தது ஏன்?

முதல்வர் பழனிசாமி: நீட் தேர்வு ஒரு முக்கியமான, உணர்வுப்பூர்வ மான பிரச்சினை. தமிழக மாண வர்கள் நலன் கருதி நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம். பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் மனுக்கள் மூலமும் நேரிலும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியிருக்கிறேன்.

சிறப்புக்கூட்டம்

நிராகரிக்கப்பட்டதற்கான கார ணம் தெரிந்தால்தான் அதனை சரிசெய்து மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப முடியும். அப்படியே அனுப்பினால் மீண்டும் அதே பதில்தான் வரும். மத்திய அரசுக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டு அதற்கும் பதில் வரவில்லை என்றால் சிறப் புக் கூட்டம் கூட கூட்டலாம். இவ் வாறு விவாதம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x