

அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக குடியிருப்போருக்கு இலவச பட்டாவுடன் வீடு தரப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
சென்னை
அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாகக் குடியிருப்போ ருக்கு பட்டா வழங்குவதுடன், குடிசைமாற்று வாரியம், வீட்டுவசதி வாரியம் மூலம் வீடும் கட்டிக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இதுதொடர் பாக நேற்று நடந்த விவாதம்:
மா.சுப்பிரமணியன்(திமுக): சென்னை மாதிரியான இடங்களில் ரயத்வாரி, அரசு புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு நிலப் பிரிவு கள் உள்ளன. இதில் அரசு புறம் போக்கு, நத்தம் புறம்போக்கு நிலங் களுக்கு பட்டா மட்டும் இருக்காது. ஆனால், அந்த இடத்தை விற்க லாம். கட்டிட அனுமதி வழங்கப் படும்.
திமுக ஆட்சியில் தனி வட் டாட்சியர் நியமிக்கப்பட்டு, நத்தம் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால், 8 ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. திமுக ஆட்சியில் பெரம்பூர் பகுதியில் 2,500 பர்மா தமிழர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இதுபோன்ற நிகழ்ச்சி இல்லை.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: கடந்த 2011-ம் ஆண்டுமுதல் ஆண்டுக்கு ஒரு லட்சம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பட்டா வழங்கப்படுகிறது. பொதுவாக, வழக்கமான திட்டத்தில் ஆட்சேபகர மற்ற புறம்போக்கு நிலங்களைத் தேர்வு செய்து அதில் பட்டா வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. வரன்முறைப்படுத்தி பட்டா வழங்குவதில்தான் பிரச் சினை வருகிறது. ஆட்சேபகரமான புறம்போக்கில் நீர்நிலை புறம் போக்கு மற்றும் சுடுகாடு உள்ளிட்ட நிலங்கள், ஆட்சேபகரமற்ற புறம் போக்கு நிலங்களில் பொதுவாகக் குடியிருப்புகளுக்காக வீடு கட்டு பவர்கள், ஏழ்மை நிலையி்ல் இருப்ப தால், நில வகைப்பாடு பார்க்காமல் கிடைக்கும் இடங்களில் வீடுகளைக் கட்டுகின்றனர்.
வீட்டு மனை பட்டாவைப் பொறுத்தவரை 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை 20 லட்சம் என இலக்கு நிர்ணயித்து 23 லட்சம் வரை அதிமுக அரசு பட்டா வழங்கியுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம் மாவட்டங்களில் மதிப்பு மிக்க இடங்களை சமூகநல கண்ணோட்டம் இல்லாதவர்கள் ஆக்கிரமித்து வியாபார நோக் கில் பயன்படுத்தக் கூடாது என்று தடையாணை உள்ளது. இதை நீக்கியும்கூட பட்டா வழங்கப்பட் டுள்ளது. எனவே, 110 - சிறப்பு திட்டம் அடிப்படையில் வரன் முறைப்படுத்த 2 அரசாணைகள் போடப்பட்டுள்ளன. ஏழை எளிய மக்களுக்காக கட்டிடங்கள் கட்டப் படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மா.சுப்பிரமணியன்: ஒட்டு மொத்தமாக 20 முதல் 30 சத வீதம் இடங்கள் அரசு, நத்தம் புறம்போக்காக உள்ளது. இந்த இடங்களை எந்தப் பாகுபாடும் பார்க்காமல் ‘ஹவுஸ் சைட்’ என்ற அடிப்படையில் பட்டா வழங்க வேண்டும்.
அமைச்சர் உதயகுமார்: அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசாணை போடப் பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் வந்ததால் 3 மாதம் செயல்படுத்த வில்லை. தற்போது காலநீட்டிப்புக் காக துணை முதல்வர், முதல்வ ருக்கு சென்றுள்ளது. அனுமதி கிடைத்ததும் அரசாணை போடப் படும். உறுப்பினர் இடம்தான் கேட்கிறார். ஆனால் இடமும் கொடுத்து, வீட்டுவசதி வாரியம், குடிசைமாற்று வாரியம் மூலம் வீடே கட்டிக் கொடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.