Published : 18 Jul 2019 07:47 AM
Last Updated : 18 Jul 2019 07:47 AM

காஞ்சிபுரத்தில் ரூ.120 கோடியில் புற்றுநோய் மேன்மைமிகு மையம்; 2 ஆயிரம் புதிய பேருந்துகள் ரூ.600 கோடியில் வாங்கப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு 

 

சென்னை

காஞ்சிபுரம் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.120 கோடியில் புற்றுநோய்க் கான மேன்மைமிகு மையம் அமைக் கப்படும் என்றும், போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.600 கோடியில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:

காஞ்சிபுரம் மாவட்டம் காரப் பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவ மனையில் புற்றுநோய்க்கான மேன்மைமிகு மையம் ரூ.120 கோடியில் அமைக்கப்படும். நோய்த் தடுப்பு, நோய் குறைத்தல், வலி நிவாரணம், புனர்வாழ்வு, சிகிச்சை தரம் உயர்த்துதல் போன்ற 12 ஒருங்கிணைந்த சுகாதார சேவை கள் வழங்க மாநிலத்தில் உள்ள கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங் கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூ.105 கோடியில் நலவாழ்வு மையங்களாக மாற்றி அமைக்கப்படும்.

‘அனைவருக்கும் நலவாழ்வு’ திட்டத்தில் 296 துணை சுகாதார மையங்களுக்கு ரூ.79 கோடியே 93 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும். நரம்பியல், இதய நோய், புற்றுநோய், கண் சிகிச்சை, குழந்தைகள் நல அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, தீக் காயம், சிறுநீரக சிகிச்சை பிரிவு கள், சீமாங்க் பிரிவு போன்ற உயர் சிகிச்சைகள் அளிப்பதற்காக, ஈரோடு மாவட்ட தலைமை மருத்துவ மனை ரூ.67 கோடியே 76 லட்சம் செலவில் உயர் சிறப்பு மருத்துவ மனையாக மேம்படுத்தப்படும்.

தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சேவை திட்டத்தின்கீழ் 32 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவமனை வீதம் பலவகை காயங்களுக்கு சிகிச்சை அளிக்க உலகத்தரம் வாய்ந்த தீவிர சிகிச்சை மையம் ரூ.49 கோடியே ஒரு லட்சம் மதிப்பில் அமைக்கப்படும். விபத்துக்குப் பின் சிகிச்சை பெறும் நோயாளிகள், நாள்பட்ட நோயாளி களுக்கு இயன்முறை சிகிச்சை அளிக்க, சென்னை கே.கே.நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனை யில் நவீன வசதிகள், உபகரணங் களுடன் ரூ.40 கோடியில் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்.

தற்கொலையால் ஏற்படும் இறப்புகளை தடுக்க 22 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டணமில்லா 104 தொலைபேசி சேவை வழியாக ஆலோசனை வழங்கும் மையம், ரூ.6 கோடியே 72 லட்சம் மதிப்பில் அமைக்கப் படும். சேலம் சுகாதார மாவட்டத்தை 2 ஆக பிரித்து ஆத்தூரை தலை மையிடமாக கொண்டு புதிய சுகா தார மாவட்டம் ஏற்படுத்தப்படும்.

காசநோய், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மருந்துகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்ய, 23 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 5 நகர்ப்புற சுகாதார மையங்களில் புதிய முயற்சியாக, 28 வகையான மருந்துகள் வழங்கும் 32 தானி யங்கி இயந்திரங்கள் ரூ.80 லட்சத் தில் அமைக்கப்படும்.

புதிய பேருந்துகள்

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் இந்த ஆண்டு ரூ.600 கோடியில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் அறிமுகப்படுத் தப்படும். இந்த நிதியாண்டில் அரசு நிதி நிறுவனங்களின் நிதி ஆதாரம் மூலம், 10 பணிமனைகள் ரூ.50 கோடி மதிப்பில் தரம் உயர்த்தி நவீனப்படுத்தப்படும்.

திருச்சி மாவட்ட பால் உற்பத்தி யாளர்கள் ஒன்றியத்தில் இருந்து பிரித்து கரூரை தலைமையிடமாக கொண்டு புதிய பால் உற்பத்தி யாளர்கள் ஒன்றியம் உருவாக் கப்படும். தருமபுரி- கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் இருந்து தருமபுரியை பிரித்தும், மதுரை ஒன்றியத்தில் இருந்து தேனியை பிரித்தும், திருநெல்வேலி ஒன்றியத்தில் இருந்து தூத்துக்குடியை பிரித்தும், விழுப்புரம்-கடலூர் கூட்டுறவு பால் ஒன்றியத்தில் இருந்து கடலூரை பிரித்தும் புதிய பால் உற்பத்தி யாளர்கள் ஒன்றியங்கள் உருவாக் கப்படும்.

ஒன்றியங்களை பிரிப்பதன் விளைவாக ஆவின் மூலம் கொள் முதல் செய்யப்படும் பால், நாளொன் றுக்கு 33 லட்சம் லிட்டரில் இருந்து 35 லட்சம் லிட்டராகவும், ஆவின் பால் விற்பனை 22 லட்சத்து 50 ஆயிரம் லிட்டரில் இருந்து 25 லட்சம் லிட்டராகவும் உயரும்.

இவ்வாறு முதல்வர் அறிவித் தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x