

சென்னை
சட்டவிரோத செயல்களை தடுப் பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மசாஜ் சென்டர்களில் சோதனை நடத்த டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் நீதிமன்ற அனுமதியுடன் ஒரு சில ஸ்பா மற்றும் மசாஜ் பார்லர்கள் செயல் பட்டு வருகின்றன. முறையான அனுமதியில்லாமல் பல மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வருகின் றன. இங்கு சட்டவிரோத செயல் களும் நடக்கின்றன. உள்ளூர் காவல் துறையினரின் துணையுடன் இவை செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற மசாஜ் பார்லர்களுக்குச் செல்லும் ஆண் வாடிக்கையாளர்களுக்கு, பெண்களை மசாஜ் செய்ய வைத்து பணம் பறிப்பதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற பார்லர்களை குறி வைத்து சென்னையைச் சேர்ந்த ரவுடி மங்களேரி குமரன் தலைமை யிலான கும்பல் கைவரிசை காட்டி வந்தது. ரவுடி மங்களேரி குமரனின் கூட்டாளிகளில் ஒருவரை மசாஜ் செய்ய அனுப்பி வைத்து, அங் குள்ள பெண்களுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டு, செல்போனில் படம் பிடித்து, பின்னர் அதை வைத்து மிரட்டி, பணம் பறிப்பது இந்த கும் பலின் வழக்கம். எதிர்த்து பேசினால் ஊழியர்களை பயமுறுத்த கைகளில் வெட்டுவார்கள்.
இதுகுறித்து காவல் துறை யினரின் விசாரணையில், இந்த கும்பல் கடந்த 4 ஆண்டுகளில் 22 மசாஜ் பார்லர்களில் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பார்லர் கள் அனைத்தும் அனுமதியின்றி நடத்தப்படுபவை என்பதால் போலீ ஸிலும் வழக்குப்பதிவு செய்யப்பட வில்லை.
இந்நிலையில், இதே கும்பல் கடந்த 13-ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலை வெட்டுவாங்கேனி பகுதியில் ஒரு மசாஜ் பார்லரில் கொள்ளையில் ஈடுபட்டது. ரூ.47 ஆயிரம், பெண்கள் அணிந்திருந்த மோதிரம், செயின்களையும் பறித் தனர். கொள்ளை நடந்து கொண் டிருந்தபோது அங்கு வந்த மசாஜ் பார்லர் உரிமையாளர், கொள்ளை யர்களை கடைக்கு உள்ளேயே வைத்து பூட்டிவிட்டு போலீஸா ருக்கு தகவல் தெரிவித்தார்.
6 பேர் கைது
போலீஸார் விரைந்து வந்து விக்னேஷ், சூர்யா, தர்மா, குமரன், பிரபாகரன், சதீஷ் ஆகியோரை கைது செய் தனர். இதில் போலீஸிடம் இருந்து தப்ப முயன்றபோது குமரன், பிர பாகரன், சதீஷ் ஆகிய 3 பேர் ஒரு கட்டிடத்தில் இருந்து குதித்ததில் அவர்களின் கைகள் முறிந்து விட்டன. கைது செய்யப்பட்ட 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப் பட்டனர்.
இதற்கிடையே தமிழகம் முழு வதும் அனுமதியின்றி செயல்படும் மசாஜ் சென்டர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து சாதாரண முடிவெட்டும் சலூன் கடைகளைத் தவிர்த்து, அனைத்து அழகு நிலையங்களிலும் அந்தந்த பகுதி போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.