

சென்னை
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர், ந.புவியரசன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாகவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவக் காற்றின் தாக்கத்தாலும் அடுத்த இரு நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழை பெய் யக்கூடும். திருவள்ளூர், காஞ்சி புரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோவை, திருநெல்வேலி, தேனி, கன்னியா குமரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை யில் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.