Published : 17 Jul 2019 04:34 PM
Last Updated : 17 Jul 2019 04:34 PM

வேலை வேண்டுமா?- சென்னை தொலைக்காட்சி, வானொலி நிலையத்தில் பணி

சென்னை தொலைக்காட்சி நிலையம் மற்றும் அகில இந்திய வானொலி நிலையத்தின் வர்த்தக ஒலிபரப்பு சேவைக்காக ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேவைப்படுகின்றனர். இதற்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன 

என்ன பணி: மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் 
காலியிடங்கள்: தொலைக்காட்சியில் 1, வானொலியில் 1
கல்வித் தகுதி: எம்பிஏ (மார்க்கெட்டிங்) அல்லது மார்க்கெட்டிங் துறையில் முதுகலை டிப்ளமோ, மார்க்கெட்டிங் துறையில் குறைந்தது ஓராண்டு அனுபவம்
சம்பளம்: ரூ.30,000
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்கவேண்டும்.

*

என்ன பணி: மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் கிரேட் 1
காலியிடங்கள்: தொலைக்காட்சியில் 1, வானொலியில் 1
கல்வித் தகுதி: எம்பிஏ (மார்க்கெட்டிங்) அல்லது மார்க்கெட்டிங் துறையில் முதுகலை டிப்ளமோ, மார்க்கெட்டிங் துறையில் குறைந்தது 4 ஆண்டுகள் அனுபவம்
சம்பளம்: ரூ.42,000
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்கவேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது:  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.  
அனுப்ப வேண்டிய முகவரி: 
நிகழ்ச்சித் துறைத் தலைவர், 
சென்னை தொலைக்காட்சி நிலையம், 
எண்-5, சுவாமி சிவானந்தா சாலை, சேப்பாக்கம், 
சென்னை-600 005.  
மின்னஞ்சல் முகவரி: dtcddkchennai@gmail.com 

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.08.2019 

மேலும் விவரங்களுக்கு:  www.prasarbharati.gov.in/allvacancies.php என்ற இணைய தள முகவரியை அணுகவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x