

குரோம்பேட்டையில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெரியப்பாவை அடித்துக் கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை குரோம்பேட்டை டி.எல்.டி சாலையை சேர்ந்தவர் அந்தோணிதாஸ் (58). இவரது தம்பி எட்வர்டு. இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளன. நேற்று தெருக்குழாயில் தண்ணீர் வந்தது. அந்தோணி தாஸும், எட்வர்டின் மகன் ரொனால்டும்(21) தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறு கைகலப்பாக மாறியது.
இதில் அந்தோணிதாஸின் மார்பில் ரொனால்டு தாக்க, அவர் மயங்கி விழுந்தார். அதை பார்த்த அந்தோணிதாஸின் மகன் திவாகர் (21), ரொனால்டை தட்டிக்கேட்க, அவரையும் ரொனால்டு தாக்கினார்.
அருகே இருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்தோணிதாஸ் பரிதாபமாக இறந்தார்.