Published : 17 Jul 2019 01:41 PM
Last Updated : 17 Jul 2019 01:41 PM

ஆண்டுதோறும் அதிகரிக்கும் மின் கட்டணம்: புதுச்சேரியில் ஒரு விளக்கு திட்டத்தில் 8,808 இணைப்புகளா? - ஆய்வு மேற்கொள்ள முதல்வர், ஆளுநரிடம் மனு

புதுச்சேரியில் ஒரு விளக்கு திட்டத்தில் 8,808 இணைப்புகள் உள்ளதாக மின்துறை தெரிவித்துள்ளது.  இதனை ஆய்வு செய்யக்கோரி முதல்வருக்கும், ஆளுநருக்கும் மனு தரப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.  அதன்படி தற்போது வீடுகளில் மின் பயன்பாட்டு கட்டணம் ரூ.100 என கணக்கிடும்போது அதனுடன்  உயர்த்தப்பட்ட 8.59 சதவீத தொகையினையும் சேர்த்து ரூ.108.59 செலுத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் மின்துறையின் கீழ் செயல்படும் கோவா உள்ளிட்ட 6 யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் கொள்முதல் விலை, விநியோகிக்கும்போது ஏற்படும் மின் இழப்பு, மின் திருட்டு ஆகியவைகளை கணக்கிட்டு மின் கட்டணத்தை நிர்ணயித்து வருகிறது.

திருட்டு நடைபெறுவதை பொதுமக்களும் உணர்ந்து தடுக்க வேண்டும். உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை என்று மின்துறை அமைச்சர் கமலக்கண்ணனும் தெரிவித்திருந்தார்.

அதேபோல் புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் ரூ. 388.3 கோடியும், வீடு மற்றும் தொழிற்சாலைகள் ரூ. 81.8 கோடியும் மின்கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர்.  இதை வசூலிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இச்சூழலில் புதுச்சேரியிலுள்ள 4 பிராந் தியங்களில் ஒரு விளக்கு திட்டத்தில் 8,808 இணைப்புகள் உள்ளதாக மின்துறை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் தந்துள்ளது.

இதுதொடர்பாக ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி கூறியதாவது:

புதுச்சேரியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அனைவரும் மின் வசதி பெற வீட்டுக்கு ஒருவிளக்கு அடிப்படையில் நிபந்தனைகளுடன் குடிசை வீடுகளுக்கு மட்டும் இலவசமாக ஒரு விளக்கு திட்டம் அமலானது. அதன்பின்னர் அரசு குடிசை வீடுகளை கல்வீடுகளாக கட்ட மானியம், உதவி செய்துள்ளது. குடிசையில்லா மாநிலமாக புதுச்சேரியை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.

இச்சூழலில் ஒரு விளக்கு திட்டத்தில் உள்ளோர் விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்ட போது 4 பிராந் தியங்களையும் சேர்த்து 8,808 இணைப்புகள் உள்ளதாக தெரிவித்தனர்.

புதுச்சேரி நகர கோட்டத்தில் 1,416 இணைப் புகளும், வருவாய் பிரிவு இரண்டாவது கோட்டத்தில் 927 இணைப்புகளும், வருவாய்
பிரிவு 9-வது கோட்டத்தில் 3,430 இணைப் புகளும் உள்ளன. காரைக்காலில் 3,010 இணைப்புகளும், மாஹே பிராந்தியத்தில் 22 இணைப் புகளும், ஏனாமில் 3 இணைப்புகளும் உள்ளன.

கடந்த அரசு அனைவருக்கும் இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கியுள்ள நிலையில் எப்படி ஒரு விளக்கு திட்டத்தில் இத்தனை பயனாளிகள் இருக்க முடியும் என தெரியவில்லை. மின்துறையினர் முறையாக ஆய்வு நடத்தாததால்  அரசுக்கு கோடிக்கணக்கில் பணம் இழப்பு ஏற்படுகிறது. அந்த இழப்பு மக்களின் மின்கணக்கில் சேர்ந்து கூடுதல் கட்டணமாகிறது. மின் இணைப்பு பெற்றுள்ள வீடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

விதிகள் மீறி இருப்போர் இணைப்புகளை பொது விநியோக மின்திட்டத்தில் மாற்ற வேண்டும் என்று முதல்வர், ஆளுநர், மின்துறை செயலரிடம் மனு தந்துள்ளேன்" என்று குறிப்பிட்டார்.

விதி என்ன?

ஒரு விளக்கு திட்டத்தின் விதி தொடர்பாக மின்துறை தரப்பில் கேட்டதற்கு, "40 வாட்ஸ் பல்ப் மட்டுமே பயன்படுத்த வேண்டும். விதிகளுக்கு உட்பட்டு அனுமதி பெற்று 40 வாட்ஸ் டியூப் லைட் பயன்படுத்தலாம். வாழும் வீடு 300 சதுரஅடிக்குள் இருக்க வேண்டும். விதிமீறினால் இணைப்பு துண்டிக் கப்படும். தவறாக மின் இணைப்பை பயன் படுத்தக்கூடாது. விவசாய நிலத்திலுள்ள குடிசை வீடுகள் இதில் இடம்பெறாது" என குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x